TTF Vasan : கையில் ராடுடன் கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள்.. டிடிஎஃப் வாசன் கடையில் நடந்த திருட்டு!
சென்னை: பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் தனது நண்பருடன் இணைந்து சென்னையில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையில் விலை உயர்ந்த ஹெல்மெட், விலை உயர்ந்த பைக்கின் உதிரி பாகங்கள் என அனைத்தும் விற்கப்பட்டு வரும் நிலையில் இந்த கடையில் நேற்று இரவு ஒரு கொள்ளை சம்பவம் நடந்து இருப்பதாக டிடிஎஃப் வாசன் வருத்தத்துடன் கூறி இருக்கிறார்.
கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன், இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வீலிங் செய்து, அதை தனது யூடியூபில் பதிவிட்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார். youtube இல் இப்படியெல்லாம் கூட பணம் சம்பாதிக்க முடியுமா? என்று பல இளைஞர்களை யோசிக்க வைத்தவர் இந்த டி.டி.எப் வாசன். ஒரு காலத்தில் இவர் தொட்டதெல்லாம் பொன்னானது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு இவரது youtube மிகப்பெரிய வளர்ச்சி கண்டது.

அடுத்தடுத்த வழக்குகள்: பெரும் வளர்ச்சி அடைந்த வாசன், அடுத்தடுத்து பல ஊர்களுக்கு டிராவல் செய்வதை வீடியோவாக எடுத்து பதிவிட்டு மேலும் பிரபலமானார். சில ஆண்டுகளுக்கு முன் தனது பிறந்த நாளில், தனது சப்ஸ்கிரைபர்களை சந்திக்க முடிவு செய்தார். இதில், இருந்து தான் இவருக்கு பிரச்சனையை ஆரம்பம் ஆனது. அந்த இடத்தில் இவரை பார்ப்பதற்கு அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதால் அந்த இடத்தில், முள்ளும் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் இவரை கைது செய்தன. அதன் பிறகு, அதி வேகத்தில் வாகனத்தை ஓட்டினார் என அடுக்கடுக்கான இவர் மீது புகார்கள் வந்தனர்.
மஞ்சள் வீரன்: தனக்கு இருக்கும் பிரபலத்தை வைத்து ஹீரோவாக முடிவு செய்த வாசன், திருவீகா பூங்கா படத்தை இயக்கிய செல் அம் இயக்கத்தில் உருவாக இருந்த, மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக கமிட் ஆனார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது படத்திற்கு ஓர் ஆண்டுக்கு மேலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த படத்தில் இருந்து டிடிஎஃப் வாசனை நீக்கிவிட்டதாக படத்தின் இயக்குநர் அதிர்ச்சியான தகவலை வெளிட்டார். இதைத்தொடர்ந்து இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர். தற்போது டிடிஎஃப் வாசன் ஐபிஎல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கடையில் கொள்ளை: இந்நிலையில் டிடிஎஃப் வாசன் தனது instagram பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஹெல்மெட் அணிந்து பைக்கில் வரும் இரண்டு பேர், கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று விலை உயர்ந்த ஹெல்மெட் மற்றும் கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இந்த வீடியோவை பதிவிட்டு, சென்னைக்கு வந்து ஏதாவது வேலை செய்யலாம் என்று பார்த்தால் விடமாட்டாங்க போல என்று வடிவேலு பேசும் வசனத்தை பதிவிட்டுள்ளார்.
கையில் கம்பியுடன் கடைக்குள் நுழைந்த அந்த இரட்டை கொள்ளையர்கள் இரண்டு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மூன்று ஹெல்மெட்டுகளையும், கடையில் இருந்த 50 ஆயிரம் ரூபாயும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்துவதற்காக போலீசார் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது, அதே பகுதியில் கண்ணாடி கடை ஒன்றிலும் இவர்கள் கைவரிசை காட்டி உள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











