பிரபல நடிகர் வீட்டில் பணம் கொள்ளை - வேலையாளிடம் விசாரணை!
ஐதராபாத் : பிரபல தெலுங்கு நடிகரின் வீட்டில் வேலை செய்யும் ஒருவர் 2 லட்சம் ரூபாயை திருடிக்கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் ஜூப்ளி ஹில்ஸ் வீட்டில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது பற்றி சிரஞ்சீவியின் மேனேஜர் கங்காதர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வீட்டில் வேலை செய்துவந்த சென்னய்யா என்பவர் தான் பலமுறை கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய்க்கு திருடியுள்ளார். சென்னய்யாவை கைது செய்த போலீசார் தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிரஞ்சீவி தற்போது, சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகும் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் நடிப்பதற்குத் தயாராகி வருகிறார். இந்த திருட்டு வழக்கு தொடர்பான மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும்.
Comments


Click it and Unblock the Notifications