ராபர்ட் - வனிதா சொன்ன அக் 5.. இன்னைக்கு என்ன தெரியுமா?.. வனிதாவே வெளியிட்ட செம வீடியோ

சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். சில படங்களில் நடித்த அவர் சினிமாவிலிருந்து காணாமல் போனார். அதற்கு பிறகு தனது வீட்டில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அவ்வப்போது வெளியே தெரிந்த அவர்; பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிக்பாஸுக்கு பிறகு அநீதி, அந்தகன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படம் பெரும் பேசுபொருளானது.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். அவரது மகள்களில் வனிதாவும் ஒருவர். சில படங்களில் ஹீரோயினாக நடித்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். வீட்டுக்குள் அவர் பேசிய ஒவ்வொரு விஷயமும் தடாலடியாகவே இருந்தது. அதேபோல் தான் கலந்துகொள்ளாத பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தனது யூட்யூப் சேனலில் விமர்சனம் செய்கிறார். இப்படி ஒருபக்கம் பிஸியாக இருக்கும் அவர் படங்களிலும் நடித்துவருகிறார். அந்தவகையில் அநீதி, அந்தணன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

vanitha robert

திருமண சர்ச்சை: இதற்கிடையே வனிதாவின் திருமண விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. முதலில் ஆகாஷ் என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவரும் பிரிந்துவிட்டனர். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் இப்போது பிரபு சாலமனின் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மகள் ஜோவிகாவும் பிக்பாஸின் கடந்த சீசனில் கலந்துகொண்டார். அவரும் திரைத்துறையில் இப்போது களமிறங்கியிருக்கிறார்.

தொடர் திருமணம்?: ஆகாஷை பிரிந்த வனிதா; இன்னொருவரை திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமண உறவும் பாதியில் முடிந்தது. சூழல் இப்படி இருக்க மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார் வனிதா. கிறிஸ்தவ முறைப்படி நடந்த அந்தத் திருமணத்தில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் பங்கேற்றிருந்தார். அந்தப் புகைப்படங்கள் அச்சமயத்தில் மிகப்பெரிய ட்ரெண்டானது என்பது நினைவுகூரத்தக்கது. மூன்றாவது திருமண உறவும் பாதியில் முடிந்தது.

நான்காவது திருமணம்?: பீட்டர் ரொம்பவே குடித்ததால்தான் வனிதா வெளியேறியதாக சிலர் சொல்கிறார்கள். இப்போது சிங்கிளாக இருக்கும் வனிதா நான்காவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்று கடந்த சில மாதங்களாகவே பேச்சுக்கள் பலமாக ஓடின. நிலவரம் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு கடற்கரையில் ராபர்ட்டின் கையை பிடித்து முட்டி போட்டு வனிதா அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானது. அது முழுக்க முழுக்க திருமண அழைப்பிதழ் வடிவில் இருந்தது.

நோ திருமணம்: இதன் காரணமாக ராபர்ட்டுக்கும் - வனிதாவுக்கும் திருமணம் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் புதிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. வனிதாவும், ராபர்ட்டும் அவ்வீடியோவில் தோன்றுகிறார்கள். சொல்லிடலாமா என்று வனிதா கேட்க அதற்கு வேண்டாம் என்று ராபர்ட் மறுக்கிறார். பிஸ்கு மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் போஸ்டர் வருகிறது. அந்தப் போஸ்டர்தான் சில நாட்களுக்கு முன்பு வெளியான புகைப்படம். எனவே அப்புகைப்படம் படத்தின் ப்ரோமஷனுக்காகத்தான்; இருவருக்குமான திருமண அழைப்பிதழ் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X