அடக்கடவுளே.. அயன்மேன் நடிகரின் அப்பா காலமானார்.. உருக்கமான பதிவை ஷேர் செய்த ராபர்ட் டவுனி ஜூனியர்!
நியூயார்க்: மார்வெல் படங்களில் அயன்மேன் கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் ரசிகர்களை ஈர்த்த நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியரின் தந்தை ராபர்ட் டவுனி சீனியர் புதனன்று காலமானார். அவருக்கு வயது 85.
தந்தையின் இழப்பால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு உலகளவில் வைரலாகி வருகிறது.
நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியருக்கு அவெஞ்சர்ஸ் நடிகர்கள் முதல் ஹாலிவுட் ரசிகர்கள் வரை பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

தந்தை காலமானார்
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியரின் தந்தை ராபர்ட் டவுனி சீனியர் புதன் கிழமை உடல் நலக் குறைவு காரணமாக நியூயார்க் நகரில் காலமானார். அவருக்கு வயது 85. தந்தையின் மறைவால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார் அயன்மேன் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர்.

ராபர்ட் டவுனி சீனியர்
ராபர்ட் டவுனி ஜூனியரை போலவே ராபர்ட் டவுனி சீனியரும் மிகப்பெரிய சினிமா பிரபலம் தான். நடிகராகவும், இயக்குநராகவும், எழுத்தாளராகவும், ஒளிப்பதிவாளராகவும், தயாரிப்பாளராகவும் 1960களில் ஹாலிவுட்டை கலக்கியவர். அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த ஹாலிவுட் திரைத்துறையும் இரங்கல் தெரிவித்து வருகிறது.

சீனியரின் படங்கள்
1936ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி நியூயார்க் நகரத்தில் பிறந்த ராபர்ட் டவுனி சீனியர் 1953ம் ஆண்டு வெளியான தி அமெரிக்கன் ரோடு படத்தில் ஒளிப்பதிவாளராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய சீனியர் 1961ம் ஆண்டு பலாஸ் பிளஃப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து இருந்தார். புட்னி ஸ்வோப், பவுண்ட், ஹெயில் சீசர், டவர் ஹெயிஸ்ட் என 2011ம் ஆண்டு வரை இயக்கியும் நடித்தும் ஹாலிவுட்டை கலக்கியவர்.

தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது
தந்தையின் மரணத்தால் பெரும் துயரில் ஆழ்ந்துள்ள அயன்மேன் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் தனது தந்தை புதன் கிழமை இரவு தூக்கத்திலேயே அமைதியான முறையில் காலமானார் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், பல ஆண்டுகளாக பார்கின்ஸன் எனும் நோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், இனி எந்தவொரு தொல்லையும் இன்றி ஓய்வெடுப்பார் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











