twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்ற அயன்மேன் நடிகர்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது விழாவுக்கான போட்டியில் அயன்மேன் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியரின் பெயர் இடம் பெறாதது, அவரது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த க்றிஸ் வான்ஸ் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், முக்கிய நபரான ராபர்ட் டவுனி ஜூனியர் பெயர் ஏன் இடம்பெறவில்லை என சமூக வலைதளத்தில் தொடர்ந்து கேள்வி கேட்ட ரசிகர்கள், அதற்காக ஒரு மனுவையும் ஆஸ்கருக்கு அனுப்பியுள்ளனர்.

    Robert Downey Jr up for Best Supporting Actor nod in Oscars campaign list

    இதனால், திருத்தம் செய்யப்பட்ட ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறந்த துணை நடிகர் பட்டியலில் ராபர்ட் டவுனி ஜூனியரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

    இதனால், அவரது ரசிகர்கள் பயங்கர சந்தோஷத்தில் உள்ளனர்.

    அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் இறுதியில், ராபர்ட் டவுனி ஜூனியரின் அயன்மேன் கதாபாத்திரம் இறந்து விடும்.

    இதற்கு மேல் மார்வெல் படங்களில் அயன்மேன் கதாபாத்திரத்தையும் ராபர்ட் டவுனி ஜூனியரின் அசாதாரண நடிப்பையும் பார்க்க முடியாது என ரசிகர்கள் நினைத்து வருந்தினர்.

    ஆனால், அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள பிளாக் விடோ படத்தில் அயன்மேன் கதாபாத்திரம் இடம்பெறும் என்ற தகவல் ராபர்ட் டவுனி ஜூனியரின் ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுத்தது.

    ராபர்ட் டவுனி ஜூனியரை தொடர்ந்து கேப்டன் அமெரிக்கா நடிகர் க்றிஸ் வான்ஸ், தோர் நடிகர் க்றிஸ் ஹெம்ஸ்வொர்த், ஆன்ட் மேன் நடிகர் பால் ராட், ஹல்க் நடிகர் மார்க் ரஃபல்லோ மற்றும் தானோஸ் நடிகர் ஜோஷ் ப்ரோலின் பெயர்களும், சிறந்த துணை நடிகர்கள் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    2வது கணவர் நச்சுக்கிருமி மாதிரி.. அதனால் தான் வெட்டி எறிந்துவிட்டேன்.. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி!2வது கணவர் நச்சுக்கிருமி மாதிரி.. அதனால் தான் வெட்டி எறிந்துவிட்டேன்.. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி!

    இதில், இறுதிப்பரிந்துரை பட்டியலில் யார் இடம் பெறுவார்கள் என்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.

    அதே போல சிறந்த துணை நடிகைகள் பட்டியலில் ஸ்கார்லட் ஜோஹன்சன், பிரை லார்சன்(கேப்டன் மார்வெல்), ஜோ சால்ட்னா உள்ளிட்டவர்களின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    1992ம் ஆண்டு வெளியான 'சாப்ளின்' பயோபிக் படத்திற்காக ராபர்ட் டவுனி ஜூனியர் ஆஸ்கர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Hollywood star's name has been submitted for Oscar consideration following a stellar performance in 'Avengers: Endgame', the swansong of his beloved character, Iron Man.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X