Robert Master: சொந்த மகளே அங்கிள்னு கூப்பிட்டதும் உடைந்த ராபர்ட் மாஸ்டர்.. என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: ராபர்ட் மாஸ்டர் கடந்த சில மாதங்களாக பேசு பொருளாக உள்ளார். அவரது நடிப்பில் வெளியான மிசர்ஸ் அண்ட் மிஸ்டர் பட ரிலீஸ், அவரது தாயார் மரணம் என அடுத்தடுத்து அவர் குறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது. அவரது தாய் மறைவின் போது, தாயாரின் உடலுக்கு முன், துக்கத்தில் கண்ணீருடன் அவர் நடனமாடியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவரது தந்தை அண்மையில் அளித்த பேட்டியில் மிகவும் சோகமான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
ராபர்ட் மாஸ்டர் தமிழ் சினிமாவில் இருக்கும் மிக முக்கியமான நடன இயக்குநர்களில் ஒருவர். குழந்தை நட்சத்திரமாக இருந்தே தமிழ் சினிமாவில் இருந்தாலும், அவருக்கு நடனத்தின் மீது இருந்த ஈர்ப்பினால், பிரபுதேவா மாஸ்டரிடம் இணைந்து நடனம் கற்றுக் கொண்டது மட்டும் இல்லாமல், டான்ஸ் குழுவில் நடனக் கலைஞராகவும் இருந்தார்.

ராபர்ட் மாஸ்டர்: ஒரு கட்டத்திற்கு மேல் பிரபுதேவா மாஸ்டரிடம் இருந்து விலகி வந்த ராபர்ட் மாஸ்டர் தனியாக படங்களுக்கு நடனம் அமைக்கத் தொடங்கினார். சிம்புவின் போடா போடி படத்திற்கு அவர் நடனம் அமைத்தது பாராட்டுகளை அவருக்கு ஈட்டிக் கொடுத்தது. இது மட்டும் இல்லாமல் அவருக்கு விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது. அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகை ரச்சிதாவுடன் ஜாலியாக பேசி பழகியதை இருவருக்கும் இடையில் காதல் என்று எல்லாம், கிசுகிசுக்களை சிலர் பரப்பினார்கள். அதற்கு ராபர்ட் மாஸ்டரின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து கிசுகிசுவுக்கு முடிவு கட்டினர்.
அங்கிள்னு கூப்பிட்ட மகள்: ஒவ்வொருவருவர் வாழ்க்கையிலும் மிகவும் கடினமான சூழல் என்ற ஒன்று கட்டாயம் இருக்கும். அப்படி ராபர்ட் மாஸ்டரின் வாழ்க்கையில் நடைபெற்ற மிகவும் சோகமான சம்பவம் ஒன்றை ராபர்ட் மாஸ்டரின் தந்தை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதாவது, " ஒரு 18 வயது டான்சர் பெண்ணை காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் தங்கியிருந்த இடத்தை எப்படியோ தேடிக் கண்டுபிடித்து, எனது மகனை அடித்து விட்டேன். அப்போதுதான் எனது வாழ்க்கையில் எனது மகனை முதல் முறையாக அடிக்கிறேன். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இருவரும் அந்த குழந்தைக்கு ஒன்றரை வயது இருக்கும்போது பிரிந்துவிட்டார்கள்.
உடைந்து அழுத ராபார்ட்: சில பல ஆண்டுகளுக்குப் பின்னர், அவர்கள் இருவரும் மீண்டும் சந்தித்து பேசிக் கொண்டார்கள். இருவரும் பேசி விட்டு கிளம்பும் போது ராபர்ட்டின் குழந்தை, ராபர்ட்டை நோக்கி, போயிட்டு வரேன் அங்கிள் எனக் கூறியுள்ளார். அன்றைய தினம் ராபர்ட் அழுது கொண்டே இருந்தார்" என அவரது தந்தை தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ராபர்ட் மாஸ்டருக்குள் இப்படி ஒரு சோகமா எனவும் பலரும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











