ரச்சிதா கையை புடிச்சி.. சுத்தி.. கட்டிப்புடிச்சி என்னவொரு டான்ஸ்.. ராபர்ட் மாஸ்டரின் ராஜ வாழ்க்கை!
சென்னை: நடிப்புக்கு கூட அப்படி இருக்க வேண்டாம் என சொன்ன ரச்சிதா இந்த வாரம் நடைபெற்று வரும் பிக் பாஸ் ராயல் மியூசியம் டாஸ்க்கில் ராபர்ட் மாஸ்டர் உடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
ஏற்கனவே ரச்சிதா பற்றி அவரது கணவர் தினேஷ் ரொம்பவே ஃபீல் பண்ணி பேட்டி அளித்து வரும் நிலையில், இதையெல்லாம் பார்த்தால் மனுஷன் என்ன ஆவார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
ராபர்ட் மாஸ்டர் நினைத்ததை சாதித்து விட்டார் என்றும் இப்படியா ரச்சிதாவுடன் டூயட் பாடுவார் என்றும் புதிய ப்ரோமோவை பார்த்து பிக் பாஸ் ரசிகர்கள் அய்யோ முடியலடா சாமி என புலம்பி வருகின்றனர்.

ஷெரினாவே பெட்டர்
மலையாளத்தில் ஷெரினா பேசியதே பரவாயில்லை. செந்தமிழ் பேசுறேன் என்கிற பெயரில் சிறுநீர் எல்லாம் ரச்சிதா கேட்பதை கேட்கவே முடியவில்லை. தமிழுக்கு வந்த தலைவலியாகவே இந்த சீசன் போட்டியாளர்களை தமிழை மொத்தமாக சாகடித்து வருகின்றனர். கமல்ஹாசன் இதை எப்படி இந்த வாரம் கண்டிக்க போகிறார் என நெட்டிசன்கள் ஒரு பக்கம் விளாசி வருகின்றார்.

ராஜ வாழ்க்கை
பாகுபலி மாதிரி வில் அம்பு விட ரச்சிதாவுக்கு சொல்லி கொடுப்பதும், வெறும் ஜட்டியுடன் சிம்மாசனத்தில் அமர்வதுமாக ராபர்ட் மாஸ்டர் ராஜா கேரக்டர் கிடைத்த நிலையில், ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தற்போது ரச்சிதாவுடன் அவர் ஆடி பாடி மகிழும் காட்சிகள் பிக் பாஸ் ரசிகர்களை பரிதாபத்திற்குரிய சூழலுக்கு தள்ளி உள்ளது.

தில்லானா தில்லானா
ரஜினிகாந்தின் முத்து படத்தின் தில்லானா தில்லானா பாடலுக்கு ராபர்ட் மாஸ்டரும், ரச்சிதாவும் நடனமாடும் கொடுமையெல்லாம் பார்க்க வேண்டுமா? என்றும் இதே ஜோடி அடுத்து பிக் பாஸ் ஜோடிகளிலும் ஒன்றாக இணைந்து டான்ஸ் ஆடினால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் பங்கமாக வறுத்து எடுத்து வருகின்றனர்.

என்ஜாய் பண்ணும் மாஸ்டர்
ரச்சிதாவை துரத்தி துரத்தி சைட் அடித்து வரும் ராபர்ட் மாஸ்டர், இப்போ ராஜாவாக மாறிய நிலையில், தனது ஆசை எல்லாம் தீர்த்து வருகிறார் என்றும் மாஸ்டர் செம்மையா என்ஜாய் பண்ணுகிறார் என்றும், எப்படி கையை பிடித்து, கட்டியணைத்து ஆடுகிறார் பாருங்க என நெட்டிசன்கள் வித விதமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

பாவம் தினேஷா
விஜய் டிவி சீரியல் பாவம் கணேஷா போல இப்போ ரச்சிதாவின் கணவர் தினேஷின் நிலை ரொம்பவே பாவமா இருக்கு என்றும் நெட்டிசன்கள் சும்மா விளாசி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போவதற்கு முன்பாக ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை கரெக்ட் செய்து விடுவார் போல தெரிகிறதே, அசல் கோலாரை எல்லாம் அனுப்புனீங்க, ராபர்ட் மாஸ்டரை வெளியே அனுப்ப மாட்டீங்களா என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











