Bigg Boss Tamil 6: அப்போ ரச்சிதா நிலைமை.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ராபர்ட் மாஸ்டர்?

சென்னை: இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் தான் வெளியேறுவார் என ஏற்கனவே கணிக்கப்பட்ட நிலையில், அவர் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.

ராபர்ட் மாஸ்டர் எவிக்ட் ஆனதும் ரச்சிதா எப்படி கதறி அழப் போகிறார் என்பதை காணவே ரசிகர்கள் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுக்காக ஆவலுடன் வெயிட்டிங்.

இந்த வாரம் நாமினேஷன்

இந்த வாரம் நாமினேஷன்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. அதில், வழக்கம் போலவே அசீம் நாமினேட் செய்யப்பட்டார். அசீமை தொடர்ந்து கதிரவன், தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர், ராம், அமுதவாணன் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். முகத்துக்கு நேராக நாமினேட் நடந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட பழிவாங்கும் படலங்களும் அரங்கேறின.

தனலட்சுமியா கதிரா

தனலட்சுமியா கதிரா

இந்த வாரம் அசீம் முதல் ஆளாக சேவ் ஆகவில்லை என்கிற தகவல்கள் லீக் ஆகி உள்ளன. பிரைவேட் போல் கணிப்புகளில் எல்லாம் அசீமுக்குத் தான் அதிக வாக்குகள் கிடைத்து வரும் நிலையில், கடந்த வாரம் போலவே இந்த வாரமும் அவரை வச்சு செய்ய பிக் பாஸ் டீம் முடிவு செய்து விட்டது. இந்த வாரம் தனலட்சுமி அல்லது கதிரவன் தான் முதலில் சேவ் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசீம் செகண்ட் சேவ்

அசீம் செகண்ட் சேவ்

கடந்த வாரம் கதிரவன் முதலில் சேவ் ஆனார். கடைசியாக விளிம்பு நிலைக்கு அசீம் தள்ளப்பட்டார். ஆனால், கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் எல்லாம் அசீம் தான் அதிக ஓட்டுக்களை பெற்று இருந்தார். இந்நிலையில், இந்த வாரம் அசீம் இரண்டாவதாக சேவ் ஆகி உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.

தப்பித்த ராம்

தப்பித்த ராம்

இந்த வாரம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு தூங்கி ரெஸ்ட் எடுத்து வருகிறார் என ஆயிஷா உள்ளிட்டோர்களே கலாய்த்து வரும் ராம் தான் வெளியேறுவார் என எதிர்பார்த்து வந்த நிலையில், கடைசி நேரத்தில் அவரது பிஆர் டீம் பயங்கரமாக வேலை பார்த்து விட்டதா திடீரென நேரத்தில் எவிக்‌ஷனில் இருந்து ராம் தப்பித்து விட்டாரே என பிக் பாஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

ராபர்ட் வெளியேற்றம்

ராபர்ட் வெளியேற்றம்

ரச்சிதாவுடன் ராஜா ராணி விளையாட்டு விளையாடிய ராபர்ட் மாஸ்டர் முத்தம் கேட்பது, ஏமாற்றி விட்டாள் என ஃபீல் செய்து அழுவது என ரொம்பவே ரசிகர்களை டார்ச்சர் பண்ணி விட்டார். இந்நிலையில், இந்த வாரம் நீங்க வெளியே போய் உங்க ஃபீலிங்க்ஸை கொட்டுங்க ராபர்ட் என கமல் எவிக்‌ஷன் கார்டு கொடுத்து அனுப்பி விட்டார் என சீக்ரெட்டான தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

கதறி அழுவாரா ரச்சிதா

கதறி அழுவாரா ரச்சிதா

ராபர்ட் மாஸ்டர் சாப்பிடாமல் அடம் பிடித்த நிலையிலேயே, சாப்பாட்டில் ஏன் கோபத்தை காட்டுறீங்க என ராபர்ட் மாஸ்டருக்காக கரிசணம் காட்டி வந்த ரச்சிதா அவர் வெளியேறுகிறார் என்று தெரிந்ததுமே எப்படி கதறி அழப் போகிறார் என்பதை பார்க்கவே ஞாயிற்றுக்கிழமை எபிசோடை ரசிகர்கள் மிஸ் செய்யாமல் பார்ப்பார்கள்.

ரச்சிதா கணவர் ஹாப்பி

ரச்சிதா கணவர் ஹாப்பி

ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததில் இருந்தே வெளியே புலம்பித் தள்ளி வரும் ரச்சிதாவின் கணவர் இந்த வாரம் எவிக்‌ஷன் ராபர்ட் என்பதை அறிந்ததும் முதல் ஆளாக அவர் தான் சந்தோஷப்பட்டு இருப்பார் என நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

வரிசையாக மிக்சர்கள்

வரிசையாக மிக்சர்கள்

இனி ஒவ்வொரு வாரமும் வரிசையாக மிக்சர்களை வெளியே அனுப்புங்க கமல் என்றும் ராம், குயின்ஸி, மணிகண்டன், ஏடிகே, மைனா நந்தினி, ரச்சிதா, கதிர் உள்ளிட்டோர் அடுத்தடுத்து எலிமினேட் செய்யப்பட்டால் சந்தோஷமாக இருக்கும் என ரசிகர்கள் எவிக்‌ஷன் லிஸ்ட் உடன் ரெடியாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X