துஷ்டனை கண்டால் தூர விலகு.. நீ அனுபவிப்ப.. வனிதா விஜயகுமார் பற்றி ராபர்ட் மாஸ்டரிடம் அவர் அம்மா அதிரடி

சென்னை: விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா முதலில் நடிகையாக திரைத்துறையில் பயணத்தை தொடங்கினார். பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி திருமணங்கள் செய்தவர்; இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் இயக்கிய Mrs&Mr படம் கடந்த மாதம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் அப்படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக நடித்த ராபர்ட் மாஸ்டர் மனம் திறந்து சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

வனிதா விஜயகுமாருக்கு பெரிதாக அறிமுகங்கள் தேவையில்லை. நடிகையாக பயணத்தை தொடங்கி இயக்குநராக மாறியிருக்கிறார். அவரது திரைத்துறை வாழ்க்கையைவிடவும் பெர்சனல் வாழ்க்கை ரொம்பவே வெளிச்சமாகியிருந்தது. முதலில் ஆகாஷை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற அவர்; அடுத்ததாக இரண்டு திருமணங்கள் செய்து அவற்றிலிருந்து வெளியே வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராபர்ட்டுடன் ரிலேஷன்ஷிப்: இதற்கிடையே பிரபல நடன அமைப்பாளரான ராபர்ட் மாஸ்டருடன் ஏற்பட்ட பழக்கத்தை லிவிங் ரிலேஷன்ஷிப்வரை கொண்டு சென்றார் வனிதா விஜயகுமார். கண்டிப்பாக இவர்கள் நீண்ட வருடங்கள் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்த்திருந்த சூழலில்; அந்த உறவும் பாதியில் முறிந்தது. இப்படி ரிலேஷன்ஷிப் விவகாரத்தில் அடிக்கடி சிக்கி பலரது விமர்சனங்களையும் சந்திக்கும் நிலைமை அவருக்கு உருவானது. ஆனால் அதை பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை.

Robert Master has said that his mother does not like Vanitha Vijayakumar
Photo Credit:

ராபர்ட்டின் பேட்டி: வனிதாவின் ரிலேஷன்ஷிப்புகளில் அதிகம் பேசுபொருளானது என்றால் அது ராபரட்டுடனான உறவுதான். அவருக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருக்கிறது. அதன் காரணமாகவே பலரும் அவர்களது ரிலேஷன்ஷிப்பை விவாத பொருளாகவே எடுத்துக்கொண்டார்கள். இந்நிலையில் ராபர்ட்டின் தாய் அண்மையில்தான் உயிரிழந்தார். சூழல் இப்படி இருக்க தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் ராபர்ட்.

என்ன கூறினார்?: அந்தப் பேட்டியில் அவர், "எனது அம்மாவுக்கு வனிதாவை பிடிக்காது. நான் Mrs&Mr படம் செய்ததும் என் அம்மாவுக்கு பிடிக்கவில்லை. ஏன் இந்தப் படத்தில் நடித்தாய் என்றுதான் கேட்டார். எனது அப்பாவும் அப்படித்தான் கேட்டார். ஷூட்டிங் நான் செல்லும்போதுகூட, 'ஏன் இப்படி பண்ணுறனுதான் கேட்டார்கள். நானோ, 'இல்லை நான் பழகியிருக்கிறேன். அந்தப் பெண்ணை (ஜோவிகா) படிக்க வைத்திருக்கிறோம். நான் போகவில்லை என்றால் பணத்தை இழந்துவிடுவார்கள். போய் உதவி செய்கிறேன்" என்று சொல்லிதான் அந்தப் படத்துக்குள் வந்தேன்.

துஷ்டனை கண்டால் தூர விலகு: என்னை முதலில் அப்படத்துக்கு இயக்குநராகத்தன் ஃபிக்ஸ் செய்தார்கள். ஆனால் வனிதா அங்கே போய் மாறிவிட்டார். அவரை மாற்ற முடியாது. நாம்தான் மாறிக்கொள்ள வேண்டும். வெளிநாடு ஷூட்டிங் சென்றால் பாஸ்போர்ட்டுகள் தயாரிப்பாளர் கையில்தான் இருக்கும். அப்போது மட்டும் என்னிடம் இருந்திருந்தால் பாதியில் வந்திருப்பேன்.

இருந்தாலும் முடித்துக்கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அந்தப் படத்தின் ஷுட்டிங் கதைகளை அம்மாவிடம் ஃபோனில் சொன்னால்; 'நீ நேர்ல வந்து இன்னும் நிறைய கதைகள் சொல்வ பாரு' என்றுதான் கூறுவார். எங்கள் பழைய பிரச்னைகளை அம்மாவிடம் சொன்னபோதெல்லாஅம், 'துஷ்டனை கண்டால் தூர விலகு. இன்னும் அனுபவிப்ப பாரு' என சொல்வார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X