ஐ லவ் யூ சொன்ன ராபர்ட் மாஸ்டர்.. ஒருவேளை அவங்களுக்கு சொல்லி இருப்பாரோ? கலாய்க்கும் பேன்ஸ்!
சென்னை : ராபர்ட் மாஸ்டர் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள போஸ்டைப் பார்த்து ரசிகர்கள் பங்கமாக கிண்டலடித்து வருகின்றனர்.
தமிழில் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய ராபர் மாஸ்டர், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான தமிழ் செல்வன் படத்தில் பேக் டான்ஸராக நடனமாடியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் : பிக் பாஸ் வீட்டிற்குள் 21 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே வந்த ராபர்ட் மாஸ்டர் பார்ப்பதற்கு கரடுமுரடாக இருந்தாலும், அனைவரிடத்திலும் மிகவும் அன்பாகவே பழகினார். சக போட்டியாளர்களை டார்லிங்... டார்லிங்... என்று அழைத்து அனைவர் மனதிலும் இடம்பிடித்தார். வீட்டிற்குள் வந்த இரண்டாவது நாளே ரச்சித்தாவிடம் நட்பாக பழக விரும்புவதாக அனைவரின் பார்வையை தன் பக்கம் திருப்பினார்.

சைட் அடித்தார் : ரச்சித்தா எந்த டீமில் இருக்கிறாரோ அங்கே இருப்பதும், தூரத்தில் இருந்து சைட் அடிப்பதும், ஏக்க பெருமூச்சு விட்டு காதல் பாட்டு பாடுவதுமாகவே இருந்தார். முதல் நான்கு வாரங்கள் விளையாட்டில் கவனம் செலுத்தி விளையாடி வந்த ராபர்ட் மாஸ்டர் நாட்கள் செல்ல செல்ல ரச்சித்தாவை சைட் அடிப்பதையே வேலையாக செய்து வந்தார்.
வெளியேறினார் : பிக் பாஸ் வீட்டில் 54 நாட்கள் இருந்த ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் ஆகி வெளியேறினார். ரச்சித்தாவால் தான் ராபர்ட் விளையாட்டில் கவனம் செலுத்தி விளையாடவில்லை என்றும், அவர் வரம்பு மீறி பேசும் போது ரச்சித்தா அவரை கண்டித்து இருக்க வேண்டும், அதைவிட்டு விட்டு, எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டு கடைசியில் நாமினேஷன் செய்து அவரை வெளியில் அனுப்பியது நியாயமா என ரசிகர்கள் கேள்வி கேட்டனர். ஆனால், அதை பற்றி எல்லாம் அவர் கண்டுகொள்ளவே இல்லை.

கிண்டலடிக்கும் பேன்ஸ் : இந்நிலையில், ராபர்ட் மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு ஐ லவ் யூ டார்லிங் என பதிவிட்டு இருந்தார். இந்த போஸ்டைப் பாரத்த ரசிகர்கள், யாருக்காக இந்த போஸ்ட் என்றும், ஒருவேளை அவங்களுக்காகவா என கிண்டலாக கேட்டு வருகின்றனர். அண்மையில் வனிதாவுடன் சேர்ந்து கொடுத்திருந்த பேட்டியில், வனிதா மீது வைத்திருந்த அன்பு உண்மையானது அவருடனான நினைவுகளை நான் இன்னும் மறக்கவில்லை என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











