என் நிறுவனத்திற்கு குயின்ஸி பெயரை வைப்பேன்..ராபர்ட் மாஸ்டரின் உருட்டு!

சென்னை : தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு குயின்ஸி என்று பெயர் வைக்க இருப்பதாக ராபர்ட் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் அனைத்துப் போட்டியாளர்களிடமும் அன்பாக பழகினார்.

ராபர்ட் மாஸ்டர் பார்ப்பதற்கு கொஞ்சம் கரடுமுரடாக இருந்தாலும், ஒரு குழந்தையைப் போல வீட்டில் இருப்பவர்களை டார்லிங் டார்லிங் என்று அழைத்து மனதில் இடம் பிடித்தார்.

ராபர்ட் மாஸ்டர்

ராபர்ட் மாஸ்டர்

ராபர்ட் மாஸ்டர் நடன இயக்குநர் என்பதால், கடந்த சீசன் அமீரைப் போல டான்ஸ் ஆடி ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார் என்று பார்த்தால், வெட்டியாக அமர்ந்து பொழுதை கழித்தார். வீட்டிற்கு வந்ததுமே, ரச்சித்தாவுக்கு பிட்டை போட்ட ராபர்ட் அவரின் பின்னாலே சுற்றிக்கொண்டு இருந்தார். ரொமான்ஸ் என்ற பெயரில் ராபர்ட் மாஸ்டர் செய்தது கிரிஞ்சாக இருந்தது.

செம டாப்பிக்

செம டாப்பிக்

ராபர்ட் மாஸ்டர் ரச்சித்தா பின்னால் சுற்றியதை பார்க்க நமக்கு கடுப்பாக இருந்தாலும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம டாப்பிக் கிடைக்க இவர்கள் இருவரையும் வைத்து இணையத்தில் மீம்ஸ்கள் பறந்தன. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ராபர்ட் மாஸ்டர் பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

குயின்ஸி என் மகள்

குயின்ஸி என் மகள்

அவர் அளித்துள்ள பேட்டியில், நான் குயின்ஸி என் மகள் என்று சும்மா சொல்லவில்லை, உண்மையில் குயின்ஸியை என் மகளாகத்தான் பார்க்கிறேன் விரைவில் நான் தொடங்க இருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கு குயின்ஸி என்று என் மகளின் பெயரைத்தான் வைப்பேன் என்றார். அதேபோல, என் முன்னாள் காதலியும் ரச்சித்தா போலவே மூக்குத்தி போட்டு இருப்பாங்க அதனால் தான் அவங்களை எனக்கு பிடிக்கும் என்றார்.

தனம் விஷப்பாம்பு

தனம் விஷப்பாம்பு

மேலும், எப்படியோ நரிக்கூட்டத்திற்குள் இருந்து வெளியில் வந்து விட்டேன் என்றும், விஷம் உள்ள பாம்பு தனலட்சுமி, விஷம் இல்லாத பாம்பு ஷிவின், கழுகு அசிம், புலி மணி, யானை ஜனனி, முயல் ஏடிகே, முதலை விக்ரம், சிங்கம் போல வீட்டில் யாரும் இல்லை என ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றியும் புட்டு புட்டு வைத்தார் ராபர்ட் மாஸ்டர்.

செம உருட்டு

செம உருட்டு

இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் பேட்டி எல்லாம் நல்லாத்தான் இருக்கு என்றும், ஒரு நல்ல வாய்ப்பு வந்துச்சு அதை ரச்சித்தா பின்னால் சுற்றி கெடுத்துக் கொண்டீர்கள் இப்போ வெளியில் வந்து, குயின்ஸி பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கப்போவதாக சொல்வதை கேட்கும் போது காமெடியாக இருக்கு என்றும், உருட்டு ராஜா...நீ உருட்டு என இணையத்தில் நெட்டிசன்ஸ் கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X