Don't Miss!
- News
கைக்குழந்தைக்கு "தனி டிக்கெட்" கேட்ட விமான நிறுவனம்! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு! அலறிய ஏர்போர்ட்
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சும்மாவே இருந்த ராபர்ட் மாஸ்டருக்கு இவ்ளோ சம்பளமா…? லட்சங்களை சம்பளமாக வழங்கிய பிக் பாஸ்!
சென்னை: கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் 50 நாட்களை கடந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் எவிக்சன் செய்யப்பட்டு போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஏழு வாரங்கள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்த ராபர்ட் மாஸ்டருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ராபர்ட்
மாஸ்டர்
வெளியேறும்
போது
கடைசியா
ரச்சிதா
செய்த
செயல்..
ஜூம்
பண்ணி
பார்த்த
பிக்
பாஸ்
டீம்!

பிக் பாஸ் 50 நாட்கள்
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கியது. முதல் வாரம் 20 நபர்கள், அதன்பின்னர் மைனா நந்தினி என மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6, இந்த வாரம் 50 நாட்களை கடந்துள்ளது. இதனை செலிப்ரேட் செய்வதற்காக நேற்று பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்க்கு கேக் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறிவிட்ட நிலையில், இந்த வாரம் எவிக்சனில் மணிகண்டன், ராபர்ட் மாஸ்டர் இடையே போட்டி நிலவியது.

வெளியேறிய ராபர்ட் மாஸ்டர்
சென்ற வாரம் நடந்த ஓப்பன் நாமினேஷனில் குயின்ஷி உட்பட சிலர் மணிகண்டனை நாமினேட் செய்து Safe Game விளையாடினர். இந்த விளையாட்டு வினையாகிப் போக மணிகண்டனுக்கு கடைசி நேரத்தில் மரண பயத்தை காட்டினார் கமல். ஆனால், எதிர்பார்த்தது போலவே ராபர்ட் மாஸ்டர் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். எவிக்சன் அறிவிக்கப்படும் முன்பே, "நான் வீட்டுக்குப் போக தான் ஆசைப்படுறேன், அப்பாவை தேடுது. இதுக்குமேல என்னால விளையாட முடியாதுன்னு" ராபர்ட் மாஸ்டர் ஓப்பனாகவே சொல்லிவிட்டார்.

வழியனுப்பு விழாவில் ரச்சிதா
இறுதியாக இந்த வார எவிக்சன் ராபர்ட் மாஸ்டர் என கமல் அறிவித்ததும் மகிழ்ச்சியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ராபர்ட் மாஸ்டர். ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ராஜா-ராணி டாஸ்க்கில் வரவேற்பு கொடுத்ததை போல, அவருக்கு வழியனுப்பு விழா நடத்தினர். அப்பா - மகள் உறவில் சிக்கிய குயின்ஷி ராபர்ட் மாஸ்டர் வெளியேறியதால் கண் கலங்கினார். அதேபோல், மஹாராணியார் ரச்சிதாவும் ராபர்ட் மாஸ்டரை நினைத்து கண்ணீர் சிந்தினார்.

சும்மா இருந்ததுக்கு இவ்ளோ சம்பளமா?
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டரிடம் பேசிய கமல், "உங்கள் மீது நிறைய நம்பிக்கை வைத்திருந்தேன், கடைசி வர போட்டியில் இருப்பீங்கன்னு எதிர்பார்த்தேன்" எனக் கூறி பயண வீடியோ போட்டு வெளியே அனுப்பினார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஆக்டிவாக இருந்த ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவிடம் சரண் அடைந்த பின்னர் பொம்மையாக சும்மாவே இருந்தார். பல டாஸ்குகளில் ஆடியன்ஸில் ஒருவராக பங்கேற்ற ராபர்ட் மாஸ்டருக்கு, மொத்தம் 13 முதல் 14 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் தான் ஏற்பாடு செய்துகொடுத்தேன் என வனிதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.