ரச்சிதாவுடன் ஒரே பெட்ல படுக்க ஆசைப்பட்ட ராபர்ட் மாஸ்டர்.. கடுப்பாகி கழுத்தை நெறிக்கப் போன ரச்சு!
சென்னை: ரச்சிதாவை தொடர்ந்து சைட் அடித்து வரும் ராபர்ட் மாஸ்டர் ஒரு படி மேலே சென்று ஒரே பெட்லயே படுக்க வேண்டும் என போட்ட பிளானுக்கு ரச்சிதா ஒரேயடியாக வேட்டு வைத்து விட்டார்.
ஒவ்வொரு சீனிலும் ஒவ்வொரு விதமான காதல் கதைகள் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் 3 மாதம் தங்கும் நிலையில் ஏற்படுவது போல காட்டப்படுகிறது.
ஆனால், இதுவரை அமீர், பாவனி ஜோடி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் ஒன்றாக சுற்றி வருகின்றனர்.

நாடக காதலா
பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா மற்றும் ஆரவ்வுக்கு காதல் ஏற்பட்டது. ஆனால், ஆரவ் வெளியே வந்து வேறுவொரு நடிகையை திருமணம் செய்து கொண்டார். ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ரொமாண்டிக் டிராக் வெளியே வந்து சில படங்கள் நடிக்க வைத்தது. ஆனால், ஹரிஷ் கல்யாண் இன்னொரு பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். கவின் - லாஸ்லியா காதலும் பிக் பாஸ் வீட்டுக்குள் மட்டுமே அரங்கேறியது. கடந்த சீசனில் அரங்கேறிய அமீர் - பாவனி காதல் இன்னமும் தொடர்ந்து வருகிறது. பிக் பாஸ் வீட்டுக்காக போட்டியாளர்கள் நடிக்கிறார்களா? என்கிற கேள்வியை ரசிகர்கள் பலமுறை எழுப்பி உள்ளனர்.

நடிக்கலாமே
அதை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக ராபர்ட் மாஸ்டர் நேரடியாகவே ரச்சிதாவிடம் சும்மா இந்த வீட்டுக்குள்ளாவது காதலிப்பது போல நடிக்கலாமே என கேட்டே விட்டார். ஆனால், பிக் பாஸ் வீட்டில் தான் நடிக்க வரவில்லை என்றும் சுயமாகவே இருக்க விரும்புகிறேன் என்றும் ரச்சிதா நெத்தியடியாக சொல்லி விட்டார்.

ராஜா ராணி
என்ன தான் ரச்சிதா ராபர்ட் மாஸ்டரிடம் விலகி செல்ல நினைத்தாலும், பிக் பாஸ் வீடு மற்றும் ஹவுஸ்மேட்ஸ் அவர்களை சும்மா விடுவதாக தெரியவில்லை. பிக் பாஸ் வீடு இந்த வாரம் ராயல் மியூசியமாக மாறி உள்ளது. அதில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரச்சிதாவும் தான் தேர்வாகி ஜோடி சேர்ந்துள்ளனர்.

ஸ்பெஷல் படுக்கை
பிக் பாஸ் வீடு ராயல் மியூசியமாக மாறிய நிலையில், ராஜ குடும்பத்தினருக்கு தனியாக ஸ்பெஷல் படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிலும், கிங் சைஸ் பெட் ஒன்று இடம் பெற்றதுமே ராபர்ட் மாஸ்டருக்கு அந்த ஆசை வந்து விட்டது. அதை புரிந்து கொண்ட அசீம், ராஜா ராணி இருவருமே ஒரே பெட்டில் தான் படுக்க வேண்டும் என சொல்ல, ரச்சிதாவுக்கு கோபம் வந்து விட்டது.

கழுத்தை நெறிக்க போன ரச்சிதா
என்ன சொன்னீர்.. எனக் கேட்டுக் கொண்டே ஜாலியாக அசீமின் கழுத்தை நெறிக்கவே போய்விட்டார் ரச்சிதா. ராபர்ட் மாஸ்டர் உடன் எல்லாம் படுக்க மாட்டேன். தனியாக படுத்துக் கொள்கிறேன் என சொன்னதுமே 1000 வாட்ஸ் பல்பாக பிரகாசித்த ராபர்ட் மாஸ்டர் முகம் பியூஸ் போய்விட்டது. இன்னும் என்னவெல்லாம் கூத்துக்களை இந்த வாரம் பார்க்கப் போகிறோமோ!


Click it and Unblock the Notifications











