பிக்பாஸ் நிகழ்ச்சியே வீண்தான்.. கமலே பணத்துக்காகத்தான் போனாரு.. ராபர்ட் மாஸ்டர் சாட்டையடி
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்டவர் ராபர்ட் மாஸ்டர். அந்த சீசனில் அவர் பாதியில் வெளியேறினாலும் ரச்சிதாவுடன் அவர் காட்டிய நெருக்கத்தால் பலரது மத்தியில் ட்ரோலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சூழலில் அவர் சமீபத்தில் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் பிக்பாஸ் குறித்தும் கமல் ஹாசன் குறித்தும் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பேச்சை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி ஓபனாக போட்டுடைத்துட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
சென்னை: கமல் ஹாசன் 50 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறார். அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்தி தனது நடிப்பில் வித்தியாசத்தை காண்பிக்கும் அவர்தான் பல நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷன், ரோல் மாடல். இடையில் சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் விக்ரம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து; இப்போது படு பிஸியாக நடித்துவருகிறார். இந்தியன் 2வில் நடித்து முடித்திருக்கும் அவர் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார்.

கமல் ஹாசன் இந்திய சினிமாவில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் நீக்க முடியாதது. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று மழலை வயதிலேயே கேமராவுக்கு முன்பு தோன்றிய அவர் பிறகு நடன உதவியாளராக தங்கப்பன் மாஸ்டரிடம் சேர்ந்தார். அதன் பின்னர் நடிகராகவும் அறிமுகமான அவர் கே.பாலசந்தரின் ஆஸ்தான மாணவராக விளங்கினார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசத்தை காண்பிக்கும் அவரை பலரும் ஃபாலோ செய்துவருகின்றனர். இதனாலேயே சிவாஜிக்கு அடுத்து சினிமா பல்கலைக்கழகம் கமல் ஹாசனே என்று போற்றப்படுகிறார்.
ஆல் ஏரியாவிலும் கமல் கில்லி: நடிப்பு, நடனம் மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு, பாடல்கள் எழுதுவது, பாடுவது என அத்தனை ஏரியாவிலும் தன்னை பலமாகவே நிரூபித்திருக்கிறார். நடிப்பில் எப்படி புதுமையை புகுத்துவாரோ அதேபோல் இயக்கத்திலும் அவர் பல புதுமைகளை புகுத்தியிருக்கிறார். முக்கியமாக விருமாண்டி படத்துக்கு அவர் அமைத்த திரைக்கதை இன்றுவரை பிரமிக்க செய்வது. அதேபோல் எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும் அதை முதலில் சோதனை செய்துபார்ப்பவரும் கமலே. அதனால்தான் வைரமுத்து, "சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும் சோதனை முயற்சி சோர்வுறவில்லை" என்று தசாவதாரம் படத்தில் எழுதினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி: படங்களில் பிஸியாக நடித்துவந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இதுவரை அவர் தொகுத்து வழங்கிய சீசன்களில் ஏழாவது சீசன் கடும் விமர்சனத்தை சந்தித்தது. குறிப்பாக மாயா, பூர்ணிமா விவகாரத்தில் அவர் நடந்துகொண்ட விதத்தை எல்லோரும் ட்ரோல் செய்தார்கள். இந்தச் சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்ட ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் குறித்தும், கமல் ஹாசன் குறித்தும் பேசியிருக்கிறார்.
ராபர்ட் மாஸ்டர் பேட்டி: செய்தியாளர்களை சந்தித்த ராபர்ட் மாஸ்டர், "என்னை பொறுத்தவரை பிக்பாஸ் நிகழ்ச்சியே வீணான ஒன்றுதான். எனக்கென்று ஒரு பெயர் இருக்கிறது. நான் உள்ளே சென்றது பணம் சம்பாதிக்க மட்டும்தான். கமல் ஹாசனுக்கு உலக நாயகன் என்று பெயர் உள்ளது. அவரும் பணம் சம்பாதிக்கத்தானே பிக்பாஸுக்கு வந்தார். கமலின் சம்பளம் எவ்வளவு என்பது அனைவருக்கும் தெரியும். உள்ளே நடக்கும் பல காட்சிகளை கட் பண்ணிவிடுகிறார்கள்.
சண்டை போடலை: நான் எல்லோரிடமும் சண்டை போடாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி பண்ணலாம் என்று சொல்வேன். ஆனால் அந்த சண்டை எதேச்சையாக வந்துவிடுகிறது. என்னுடைய மகள் குயின்ஸியைக்கூட பிறந்தநாளுக்கு கூப்பிட்டேன். ஆனால் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை. உள்ளே இருக்கும்வரைதான் சொந்தம் எல்லாம். வெளியே வந்தால் எதுவும் கிடையாது" என்றார்.


Click it and Unblock the Notifications











