Don't Miss!
- News
"புருஷன் சேஷரிங்.." தெறிக்கவிடும் இரட்டை அழகிகள்.. காரணத்தை கேட்ட ஷாக் ஆவீங்க! இது புதுசா இருக்கே
- Lifestyle
Today Rasi Palan 31 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
Bigg Boss Tamil 6 Eviction: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது இவர் தான்!
சென்னை: வெள்ளிக்கிழமை வந்து விட்ட நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார் என்கிற உறுதியான கருத்துக் கணிப்பு ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன.
இந்த வாரம் ராம் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில், கடைசி நேர ட்விஸ்ட் இந்த முறையும் நடைபெற்றுள்ளது.
ராமுக்கு திடீரென கடைசி நேரத்தில் அதிக ஓட்டுக்கள் கிடைத்து வரும் நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு கன்ஃபார்மா வெளியேற போறது இந்த போட்டியாளர் தான் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன பத்தி பேச உனக்கு தகுதியே இல்லை..ராமை அசிங்கப்படுத்திய அசீம்.. சூடுபிடிக்கும் பிக் பாஸ் வீடு!

ஓப்பன் நாமினேஷன்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. அதில், வழக்கம் போலவே அசீம் நாமினேட் செய்யப்பட்டார். அசீமை தொடர்ந்து கதிரவன், தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர், ராம், அமுதவாணன் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். முகத்துக்கு நேராக நாமினேட் நடந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட பழிவாங்கும் படலங்களும் அரங்கேறின.

அசீம் முதலில் சேவ் ஆவாரா
கடந்த வாரம் கதிரவன் முதலில் சேவ் ஆனார். கடைசியாக விளிம்பு நிலைக்கு அசீம் தள்ளப்பட்டார். ஆனால், கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் எல்லாம் அசீம் தான் அதிக ஓட்டுக்களை பெற்று இருந்தார். இந்நிலையில், இந்த வாரம் கதிரவன் முதலில் சேவ் ஆவாரா? அல்லது இந்த வாரமும் அதிக ஓட்டுக்களுடன் அசீம் சேவ் ஆவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சேஃப் ஜோன்
அசீம், கதிரவன், தனலட்சுமி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஓட்டுக் கேட்ட நிலையில் அவரது அண்ணன் மணிகண்டனும் இந்த வாரம் சேஃப் ஜோனுக்கு வந்துவிட்டனர். மணிகண்டன் கடைசியில் இருந்த நிலையில், திடீரென அவர் அதிக வாக்குகளுடன் மேலே வரக் காரணமே ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

டேஞ்சர் யாருக்கு
ஜனனியை அம்பாக பயன்படுத்தி விளையாடி வரும் அமுதவாணன், ரச்சிதா நோ சொல்லியும் தொடர்ந்து ஜொள்ளு விட்டு வரும் ராபர்ட் மாஸ்டர் மற்றும் நீதிபதியாக இருந்தாலும், கேஸில் ஜெயித்தது இவங்க தான். ஆனால், நான் வெற்றியாளர் இவங்கன்னு சொல்றேன் என காமெடி செய்த நைட் டிரெஸ் பாய் ராம் உள்ளிட்டோர் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.

ராம் எஸ்கேப்
இந்த வாரம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு தூங்கி ரெஸ்ட் எடுத்து வருகிறார் என ஆயிஷா உள்ளிட்டோர்களே கலாய்த்து வரும் ராம் தான் வெளியேறுவார் என எதிர்பார்த்து வந்த நிலையில், கடைசி நேரத்தில் அவரது பிஆர் டீம் பயங்கரமாக வேலை பார்த்து விட்டதா திடீரென கடைசி இடத்துக்கு கொஞ்சம் மேலே போய் விட்டாரே என பிக் பாஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

ராபர்ட் தொல்லை ஓவர்
ரச்சிதாவுடன் ரொமான்ஸ் செய்கிறேன் என்கிற பெயரில் கடந்த வார இறுதியில் ரசிகர்களை ரொம்பவே கடுப்பேற்றிய ராபர்ட் மாஸ்டருக்கு இந்த வாரம் குட் பை சொல்ல பிக் பாஸ் ரசிகர்கள் ரெடியாகி விட்டனர். கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் கடைசி இடத்தில் இப்போதைக்கு ராபர்ட் மாஸ்டர் தான் உள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக யார் வெளியேறுவார் என்பது நாளை மாலை லீக் ஆகிவிடும்.