இந்தா வந்துட்டாருல்ல புது பேட்மேன்.. ராபர்ட் பேட்டின்சனின் ’தி பேட்மேன்’ ட்ரைலர் சும்மா தெறிக்குது!

லாஸ் ஏஞ்சல்ஸ்: டிசி ரசிகர்களுக்கு சன் டே மார்னிங்கே செம விருந்து தான் போங்க.. பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பேட்மேன் ட்ரைலர் ரிலீசாகி உள்ளது.

Recommended Video

Surya Soorarai Pottru OTT Release | பின்னணி என்ன?

ஃபிளாஷ் படத்தில் பேட்மேனாக பென் அஃப்லெக் மீண்டும் அவதாரம் எடுக்க உள்ளார் என்ற செய்தி சில தினங்களுக்கு முன்னதாக வெளியாகி உலகளவில் டிரெண்டானது.

இந்நிலையில், நடிகர் ராபர்ட் பாட்டின்சன் முதன் முறையாக பேட்மேனாக நடித்துள்ள ;The Batman' ட்ரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உலக பேட்மேன் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

பேட்மேன் நடிகர்கள்

பேட்மேன் நடிகர்கள்

உலகின் மிகப்பெரிய பணக்காரரான ப்ரூஸ் வெய்னே, மக்களை காக்கும் சூப்பர் ஹீரோவாக பேட்மேனாக தன்னை மாற்றிக் கொண்டு எதிரிகளுடன் போராடும் கதை தான் பேட்மேன். இதுவரை இந்த கதாபாத்திரத்தில் மைக்கேல் கீட்டன், கிறிஸ்டியன் பேல், பென் அஃப்லெக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தற்போது லேட்டஸ்ட்டாக ட்விலைட் சாகா ஹீரோ ராபர்ட் பாட்டின்சன் பேட்மேனாக மாறியுள்ளார்.

ட்விலைட் சாகா ஹீரோ

ட்விலைட் சாகா ஹீரோ

ஹாரிபாட்டர் படங்களில் சிறுவனாக செட்ரிக் டிகோரி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராபர்ட் பாட்டின்சன், 2008ம் ஆண்டு வெளியான ட்விலைட் படத்தின் மூலம் ஹீரோவாக உலகம் முழுக்க பிரபலமானார். ட்விலைட் சாகா வரிசையில் வந்த 5 பாகங்களும் உலகளவில் இவருக்கு ரசிகர்களை உருவாக்கியது.

டெனெட் படத்திலும்

டெனெட் படத்திலும்

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி உள்ள டெனெட் படத்திலும் ஜான் டேவிட் வாஷிங்டனுடன் இணைந்து மற்றொரு ஹீரோவாக ராபர்ட் பாட்டின்சன் நடித்துள்ளார். கடந்த ஆண்டு நடிகர் ஜானி டெப்புடன் இணைந்து இவர் நடித்த வெயிட்டிங் ஃபார் தி பார்பரியன்ஸ் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பேட்மேன் ட்ரைலர்

பேட்மேன் ட்ரைலர்

IT எனும் பேய் படத்தை இயக்கி அனைவரையும் மிரள வைத்த இயக்குநர் மேட் ரீவ்ஸ் இயக்கத்தில் ராபர்ட் பாட்டின்சன், ஜோ கிராவிட்ஸ், பால் ஃபிராங்க்ளின் டானோ, ஜெஃப்ரி ரைட் உள்ளிட்டோர் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பேட்மேன் படத்தின் மிரட்டலான ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

என்ன கதை

ஊழல் செய்யும் போலீஸ் அதிகாரியை மக்களுக்கு அடையாளம் காட்டும் நாயகனாக இந்த பேட்மேன் கதை உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது வெளியாகி உள்ள ட்ரைலரில் பேட்மேன் உடையில் ராபர்ட் பாட்டின்சன் மிரட்டுவது, கேட் உமனாக ஜோ க்ராவிட்ஸ் சண்டை இடுவது மற்றும் வில்லன் ரிட்லரின் என்ட்ரி என அனைத்துமே அடங்கி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X