சிம்பு பேனருக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் செய்த டான்ஸ் மாஸ்டர்
Recommended Video

சென்னை: வந்தா ராஜாவாதான் வருவேன் பேனருக்கு டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் குடத்தில் பாலாபிஷேகம் செய்துள்ளார்.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. பட ரிலீஸையொட்டி தன் ரசிகர்கள் யாரும் தன் பேனர்கள், கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யக் கூடாது என்று சிம்பு கோரிக்கை விடுத்தார்.
இருப்பினும் இன்று பாலாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

பாலாபிஷேகம்
டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் முதல்நாள் முதல்காட்சியை பார்த்துள்ளார். படம் ரொம்பவும் பிடித்துப் போக ஒரு ரசிகனாக சிம்புவின் பேனருக்கு குடத்தில் பாலாபிஷேகம் செய்துள்ளார்.
பாக்கெட்
சிம்பு கோரிக்கை விடுத்தாலும் அவரின் ரசிகர்களால் சும்மா இருக்க முடியவில்லை. அதனால் பாக்கெட்டுகளில் சிம்புவின் போஸ்டர்கள், பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்து மகிழ்ந்துள்ளனர்.
சிம்பு
சிம்புவின் தீவிர ரசிகர் இல்லை இல்லை வெறியர் ஒருவர் செய்த காரியத்தை பாருங்கள்.
கட்அவுட்
மதுரையில் சிம்புவுக்கு ரசிகர்கள் பிரமாண்ட கட்அவுட் வைத்துள்ளார்கள் .


Click it and Unblock the Notifications











