ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது !

சென்னை : ராபின் ஹூட் படத்தின் மோஷன் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞன் தனது யதார்த்தமான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். ஒரு துணை நடிகராக தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். தற்போது தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உள்ளார்.

Robin hood motion poster out

பலருக்கு உதவி செய்து வரும் இவர் கடந்த பொங்கல் அன்று நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் இயக்கும் சாவடி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். அதுவும் மிகவும் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டது. இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், இது போன்ற ஒரு பிரபலம் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் போன்றவற்றை வெளியிட்டால், அது மிகவும் வேகமாக மக்களிடம் சென்றடையும் என்று நம்பப்படுகிறது.

தற்போது ராபின் ஹூட் என்ற படத்தின் மோஷன் போஸ்டரை இன்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். அந்த மோஷன் போஸ்டரில் நான் கடவுள் ராஜேந்திரன், சும்மா, சூப்பராக கையில் பீடி மற்றும் கயிறு வைத்துக்கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

Robin hood motion poster out

இதுவெளியான, சில மணி நேரத்திலேயே 4 ஆயிரம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். மேலும், இதை பார்த்த ரசிகர்கள் மோட்டை ராஜேந்திரன் இப்போ எல்லாம் வில்லனா நடிச்சாக்கூட காமெடியாகத்தான் தெரியுது. இந்த கெட்டப்பில் இவரை பார்க்கும் போது சும்மா கெத்தா இருக்காரு என்று கருத்து பதிவிட்டுள்ளனர்.

லுமேரிஸ் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது. கார்த்திக் பழனியப்பன் இப்படத்தை இயக்குகிறார். தமிழ் சினிமாவில் ராபின் ஹூட் ஒரு புதிய வித்தியாசமான முயற்சி என்று கருதப்படுகிறது. ஹாலிவுட்ல் ராபின் ஹூட் பார்த்து ரசித்த ரசிகர்கள் தற்போது, கோலிவுட் ராபின் ஹூட்டை பார்த்து ரசிப்பதற்காக வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X