அடேய்.. இப்ப நான் போலீஸ் அதிகாரிடா.. கலகலக்கும் ரோபோ சங்கர்!

சென்னை: போலீஸ் அதிகாரியாக கலக்க வருகிறார் காமெடி நடிகர் ரோபோ சங்கர்.

Recommended Video

Soorarai Pottru Release | Vishal Chakra Fight Scene Making | May 1 Thala Birthday

தமிழ் திரையுலகில் பல சங்கர்கள் இருந்தாலும் ரோபோ சங்கர் என்ற பெயருக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. தனது குணசித்திர நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் தான் ரோபோ சங்கர். ஆரம்பத்தில் கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் வித்தியாசமான காமெடி மற்றும் பாடி லாங்குவேஜ் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தவர்.

பின் திரையில் பின்னால் நடித்து கொண்ட இவர் திரையின் முன்னாள் வந்து ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை தற்போது கொண்டு உள்ளார். தீபாவளி என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் வந்து சென்று இருப்பார்.

Robo Shankar acts as police officer

கோகுல் இயக்கத்தில் இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படம் தான் இவருக்கு முதலில் திரையில் கிடைத்த அடையாளம். பின்னர் பல படங்களில் நடித்தார், இவரது காமெடி பெரிதும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது மாரி படத்தில் தான் சனிக்கிழமை என்ற கதாபாத்திரத்தில் அசத்தி இருப்பார் ரோபோ.

இதன் பின் தல மற்றும் தளபதி கூட இணைந்து நடித்தார். வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் படம் இவரது காமெடிகளில் உச்சம். இவர் நடிப்பு மட்டுமல்லாது ஹாலிவுட் படமான லயன் கிங் தமிழ் வெர்சனுக்கு டப்பிங் பேசியுள்ளார், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான கன்னி மாடம் படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

Robo Shankar acts as police officer

தற்போது விஷால், ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் போன்றவர்கள் இணைந்து நடிக்கும் சக்ரா திரைப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக வருகிறார். இது இவரது திரை பயணத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படம் சம்மருக்கு வெளியாகும் என்று ஏதிர்பாக்கப்படுகிறது, ரோபோ சங்கர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் புகைபடங்களை தற்போது ஆன்லைனில் வெளியாகி டிரென்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X