வாத்தி கம்மிங்.. ரோபோ சங்கர் மகளுடன் இறங்கி குத்திய டிக்டாக் வீடியோ !

சென்னை : நடிகர் ரோபோ சங்கரும் அவரது மகளும் வாத்தி கம்மிங் பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Recommended Video

Thalapathy 65 Bigg Breaking | A.R.Murugadoss | Vijay | Kajal | Pooja Hegde

கொரோனா பாதிப்புக்கு இதுவரையில் 43ஆயிரம் பேர் உலகம் முழுவதும் இறந்துள்ளனர். இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா எனும் பயம் மக்களை வீட்டில் அடைத்துள்ளது .

 Robo shankar and her daughter tiktok video goes viral

கொரோனா பாதிப்பு காரணமாக பல பிரபலங்கள் வீட்டில் இருந்த படியே தங்களின் குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகிறார்கள் இவர்களுக்கு பிரத்யேக பொழுதுபோக்காக இணையம் அமைந்துள்ளது. இதே போல நட்சத்திர குடும்பமான ரோபோ சங்கர் குடும்பமும் வீட்டில் இருந்த படியே பல டிக்டாக்குகளை செய்து வெளியிட்டு வருகிறது.

இவ்வாறு ரோபோ சங்கர் மற்றும் அவரது மகளான இந்திரஜா சங்கர் டிக்டாக் செயலியில் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு அதிர வைக்கும் குத்தாட்டை போட்டிருக்கின்றனர் .

இந்த பாடலுக்கு வெறுமென்று ஆடாமல் அதிலும் ஒரு விழிப்புணர்வு நோக்கத்தோடு இந்திரஜா மற்றும் ரோபோ சங்கர் இருவரும் முகத்தில் மாஸ்க் அணிந்த படி செம்மையாக குத்தாட்டம் போட்டுள்ளனர் .

இந்த பாடலின் இறுதியில் ஒரு இடத்தில் மட்டும் மாஸ்கை சிறிதாக அவிழ்த்து இருவரும் திரும்பி பார்த்து கத்துகின்றனர். இந்த காணொளியில் வாத்தி கம்மிங் பாடலில் வரும் அனைவரையும் கவர்ந்த நடன அசைவையே ரோபோ சங்கர் மற்றும் அவரது மகளும் சேர்ந்து ஆடியுள்ளனர் .

 Robo shankar and her daughter tiktok video goes viral

இந்த காணொளி தற்போது சமூக வளைத்தலங்களில் வெகுவாக வைரலாகி வருகிறது. இந்த காணொளியை ரசிகர்கள் வெகுவாக ரசித்து உள்ளனர். இந்திரஜாவின் டிக்டாக்கிற்கு 20 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். டிக்டாக்கில் இவரும் ரோபோ சங்கரும் இணைந்து செய்யும் அட்டகாசங்கள் ஏராளம். இதனாலே இதை ரசிக்க பலரும் இந்திரஜாவை டிக்டாக்கில் பின் தொடர்ந்து வருகின்றனர் .

 Robo shankar and her daughter tiktok video goes viral

இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பம் எப்போதும் கிடைக்கும் நேரத்தில் டிக்டாக் செய்து ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம். இதே போல் தற்போதும் செய்து வருகின்றனர் தற்போது 21நாட்கள் ஊரடங்கில் முன்பை விட அதிக வீடியோக்களை பதிவிடுவார் இந்திரஜா என்று எதிர்பார்க்கப்படுகிறது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X