கோச் இறந்தும், உடல்நலம் பாதிக்கப்பட்டும் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரோபோ ஷங்கர் ரூ. 1 லட்சம்

By Siva

Recommended Video

Gomathi Marimuthu: ஆசிய போட்டியில் வெற்றி பெற்ற கோமதிக்கு 1 லட்சம் கொடுத்த ரோபோ ஷங்கர்- வீடியோ

சென்னை: தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு அளிப்பதாக நடிகர் ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார்.

தோஹாவில் நடைபெற்ற 23வது ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார். அவருக்கு பாராட்டுக்கள் வந்து குவிகின்றது.

Robo Shankar announces Rs. 1 lakh cash prize for Gomathi Marimuthu

இந்நிலையில் கோமதி குறித்து நடிகர் ரோபோ ஷங்கர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

ஆசிய தடகள போட்டியில் அற்புதமாக தனது திறமையை வெளிக்காட்டிய அன்பு சகோதரி கோமதி மாரிமுத்துவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவருக்கு ஒரு சின்ன அன்பு பரிசாக ரூ. 1 லட்சம் கொடுப்பதை ரொம்ப பெருமையாக நினைக்கிறேன். இதற்கு முன்பு நான் ராணுவ வீரர்கள் இறந்தபோது அவர்களின் குடும்பத்தாருக்கு பணம் கொடுத்தேன்.

நம்மை காக்கக்கூடிய எல்லைச்சாமிகளுக்காக அதை செய்தேன். ராணுவ வீரர்கள் உயிர் இழந்ததால் கவலையில் இருந்தேன். இம்முறை பெருமையாக செய்கிறேன். ஒரு இந்தியனாக, தமிழனாக அன்பு சகோதரி, தனது தந்தை இறந்து, பயிற்சியாளர் இறந்து, உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்கு மேல் விடா முயற்சியா, விஸ்வரூப வெற்றியா ஓடி ஜெயித்த தங்கை மங்கை கோமதி சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நானும் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தவன் தான். அதனால் கஷ்டப்படும் குடும்பத்தின் வலி எனக்கு தெரியும். அந்த வலியையும் தாண்டி ஜெயித்துள்ளதற்கு ஹாட்ஸ் ஆஃப். என்னால் முடிந்த சிறு தொகை ரூ. 1 லட்சம் கொடுப்பதை பெருமையாக நினைக்கிறேன். நீங்கள் இன்னும் நிறைய வெற்றி பெற வேண்டும் என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X