ஐ லைக் நெத்திலி ஃபிஷ்.. ஐ லவ் ஜார்ஜ் புஷ்.. மகளின் செம குத்தாட்ட வீடியோவை வெளியிட்ட நடிகர்!
சென்னை: நடிகர் ரோபோ ஷங்கர் தனது மகள் பிகில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் போட்ட குத்தாட்டத்தை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.
அட்லீ, விஜய் கூட்டணியில் தீபாவளிக்கு வெளியான படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
மேலும் ஜாக்கி ஷ்ராஃப், டேனியல் பாலாஜி, கதிர் உட்பட பலர் நடித்திருந்தனர். ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும் பிகில் படத்தில் விளையாட்டு வீராங்கணையாக நடித்துள்ளார்.

குறையும் வசூல்
பிகில் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. முதல் நாளில் மட்டுமே அதிக வசூலை பார்த்த பிகில் படம் அடுத்தடுத்த நாட்களில் வெகுவாக குறையத் தொடங்கியது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆட்டம்
தற்போது பல தியேட்டர்கள் மக்கள் கூட்டமின்றி காற்று வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தனது மகள், பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் போட்ட குத்தாட்டத்தை ரோபோ ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிகில் ஜெர்சியில்
ரோபோ ஷங்கரின் மகள் பிகில் படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்துள்ளார். இந்த காட்சிகள் படமாக்கப்பட்ட போது, இந்திரஜா பிகில் ஃபுட் பால் ஜெர்சியை அணிந்து தனது தோழிகளுடன் ரூமில் செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
ஐ லவ் ஜார்ஜ் ஃபுஷ்
ஐ லைக் நெத்திலி ஃபிஷ்.. ஐ லவ் ஜார்ஜ் ஃபுஷ் என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோவை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். ஏராளமானோர் ஷேர் செய்திருக்கின்றனர்.
பாண்டியம்மா சூப்பர்
இந்த வீடிய தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பிகிலில் பாண்டியம்மாவாக நடித்த இந்திரஜாவை பாராட்டி வருகின்றனர். பண்டியம்மா சூப்பர்... ரோபோ அண்ணா பொண்ணுன்னு காட்டிட்டமா... என்கிறார் இவர்.
பாண்டியம்மா வேற லெவல்
பாண்டியம்மா வேற லெவல்.. உண்மையான இன்ஸ்பிரேஷன் .. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











