Indigo: இந்தியாவையே குலுக்கிய இண்டிகோ பிரச்னை.. பாவம் ரோபோ சங்கர் மகளும் சிக்கிட்டாங்களே!

சென்னை: ஒரு நாளைக்கு சுமார் 2,200 விமானங்களை இயக்கும் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் இண்டிகோ. விமானிகள் பற்றாக் குறையால் நேற்று அதாவது டிசம்பர் 5ஆம் தேதி மட்டும் சுமார் 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. அதாவது இயக்கப்படவில்லை. இதனால் நாடு முழுவதும் விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இன்றைய நாளிதழ்களில் இந்த சம்பவம் தான் தலைப்புச் செய்தியாக உள்ளது. இந்த பிரச்னையில் மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மகள் மற்றும் மருமகன் சிக்கிக் கொண்டனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இண்டிகோ விமான சேவை தடைபட்டது பெரும் நெரிசலையும் அவதியையும் பயணிகளுக்கு ஏற்படுத்தியது. இது தொடர்பாக பயணிகள் தங்களது சமூக வலைதளங்களில் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் தாங்கள் எதிர்கொண்ட இன்னல்களை பகிர்ந்து வருகிறார்கள். பல விமான நிலையங்களில் பதில் சொல்ல முடியாமல் இண்டிகோ நிறுவனத்தினர் திணறினார்கள். இது மட்டும் இல்லமல், பயணிகள் விமான நிலையத்திலேயே போராட்டங்களில் ஈடுபட்டனர். காத்திருப்பில் இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை கூட இண்டிகோ தரப்பில் செய்யாததும் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளார்.

Robo Shankar Daughter INDRAJA ROBO SHANKAR and Her Husband Stuck At Varanasi Airport Because Of Indigo Issue

இண்டிகோவின் இந்த சொதப்பலை பயன்படுத்திக் கொண்ட மற்ற ஏர்லைன்ஸ் நிறுவனங்கள், உடனே தங்களது விமானத்தில் அதிகப்படியான விலைக்கு பயணச்சீட்டுகளை விற்பனை செய்தனர். அதாவது, சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள டிக்கெட்டின் விலையை 80 ஆயிரம் வரை விலையை உயர்த்தி உள்ளார்கள்.

வாரணாசியில் அவதி: இந்நிலையில் வாரணாசியில் இருந்து சென்னைக்கு வர, இண்டிகோவில் டிக்கெட் புக் செய்து விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்கள், முதலில் விமானம் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். அதை நம்பி இவர்கள் இருவரும் சென்றுள்ளார்கள், ஆனால் அங்கு, விமானம் இயக்கப்படவில்லை. இதனால் நீண்ட நேரம் விமான நிலையத்திலேயே காத்திருந்து, இண்டிகோ நிறுவனத்திடம் முறையிட்டுப் பார்த்து, தங்களது முயற்சிக்கு எந்த பயனும் இல்லை என்று கடைசியாக அங்குள்ள நண்பர்களின் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர்.

வீடியோ: இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், " நாங்கள் ஒரு வேலையாகத்தான் வாரணாசி வந்தோம். ஆனால் இப்போது எப்படி சென்னை செல்வது என்று தெரியவில்லை. இது மட்டும் இல்லாமல், எங்களுக்கு இங்கு தெரிந்தவர்கள் இருப்பதால் நாங்கள் அங்கு சென்று விடுவோம். ஆனால் மற்றவர்களின் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. மேலும் வயதானவர்கள் பலரும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று வீடியோ பதிவிட்டுள்ளனர். இவர்களின் இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X