Indraja robo shankar: ரோபோ சங்கர் மகள் நிச்சயதார்த்தம்… சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?
சென்னை: கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறமையால் பிரபலமானவர் ரோபோ சங்கர். வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலக்கி வரும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கும் அவரது முறை மாமனுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
வெள்ளித்திரையில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் உள்ளனர். ஆனால், ரோபோ சங்கர் விஜய்காந்த் போல பேசி, அவரைப்போல உடல்மொழியில் அசத்தி தனக்கு என தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். பீல்டுக்கு வந்த குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய உச்சத்தை தொட்ட ரோபோ ஷங்கர். ஜெயம் ரவி நடித்த தீபாவளி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்கள் தான் கிடைத்தது. பல ஆண்டுகள் கழித்து தனுஷுடன் மாரி படத்தில் தனுஷின் நண்பனாக நடிக்கும் கதாபாத்திரம் கிடைத்தது.

நடிகர் ரோபோ ஷங்கர்: இந்த படத்திற்கு பிறகு வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயை மூடி பேசவும் போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்திருந்தார். இதில் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படம், ரோபோ சங்கருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதில்,எம்எல்ஏ ஜாக்கெட் என்கிற கதாபாத்திரத்தில், அன்னைக்கு காலையில ஆறு மணி என்கிற காமெடியை பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அந்த படத்தில் அசத்தி இருப்பார்.

உடல் மெலிந்த ரோபோ ஷங்கர்: இந்த படத்தைதொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார். அண்மையில் இவர் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வெளியானது. இதையடுத்து, அவருக்கு ஆறு மாதம் மஞ்சள் காமாலை இருந்ததாகவும், தற்போது அதில் இருந்து மீண்டு வந்ததாகவும் அவரது மனைவி பிரியங்கா கூறியிருந்தார். தற்போது,பழைய நிலைமைக்கு திரும்பி உள்ள ரோபோ ஷங்கர் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

பிகில் படத்தில்: ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில், கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர், கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்திலும் அதிதி ஷங்கரின் தோழியாக நடித்திருந்தார். சில படங்களில் பிஸியாக நடித்து வரும் இந்திரஜாவிற்கு முறைமாமாவுடன் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக பிரியங்கா கூறி வந்த நிலையில்,இன்று நடிகை இந்திரஜாவிற்கு முறை மாமன் கார்த்திக்கிற்கு நிச்சயதார்த்தம் பெரியோர்கள் முன்னிலையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நக்கீரன் கோபால் , அம்மா கிரியேஷன் சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











