பல மணி நேரம் மேக்கப்.. அம்மனாக மாறிய ரோபோ சங்கர் மகள்.. கையெடுத்து கும்பிடும் பேன்ஸ்!

சென்னை: ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நவராத்திரியை முன்னிட்டு அம்மனாக மாறி போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறமையால் பிரபலமானவர் ரோபோ சங்கர்.

robo shankar daughter indraja shankar amman photos grabs everyone attention

வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

ரோபோ சங்கர்: வெள்ளித்திரையில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள், உள்ள போதும், ரோபோ சங்கர் விஜய்காந்த் போல பேசி, அவரைப்போல உடல்மொழியில் அசத்தி தனக்கு என தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். பீல்டுக்கு வந்த குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய உச்சத்தை தொட்டுவிட்டார்.

robo shankar daughter indraja shankar amman photos grabs everyone attention

அடுத்தடுத்த படங்களில்: ஜெயம் ரவி நடித்த தீபாவளி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரோபோ ஷங்கருக்கு ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்கள் தான் கிடைத்தது. பல ஆண்டுகள் கழித்து தனுஷுடன் மாரி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயை மூடி பேசவும் போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்திருந்தார்.

robo shankar daughter indraja shankar amman photos grabs everyone attention

காதல் திருமணம்: அதன் பின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார். நடிகர் ரோபோ சங்கர், பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

பிகில் படத்தில்: ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில், கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர், கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்திலும் அதிதி ஷங்கரின் தோழியாக நடித்திருந்தார். சில படங்களில் பிஸியாக நடித்து வரும் இந்திரஜாவிற்கு முறைமாமாவுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

robo shankar daughter indraja shankar amman photos grabs everyone attention

அம்மனாக மாறிய இந்திரஜா: இந்நிலையில், இந்திரஜா சங்கர், நவராத்திரி விழாவை முன்னிட்டு கொல்கத்தா துர்கா தேவியாக பல மணி நேரம் மேக்கப் போட்டு அம்மனாக மாறி உள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார். நவராத்திரி நாளில் துர்கா தேவி அசுரர்களுடன் போரிட்டு மகிஷாசுரனை வதம் செய்த நாள் என்று கேப்ஷன் போட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X