இந்திரஜா சங்கரின் ஜாக்கெட்டில் உள்ள ஸ்பெஷல்.. இதை நோட் பண்ணீங்களா.. இனிமே டிரெண்டாகிடுமே!
சென்னை: இந்திரஜா சங்கர் மற்றும் கார்த்திக் திருமணம் கடந்த மார்ச் 24ம் தேதி மதுரையில் நடைபெற்றது. ரோபோ சங்கர் தனது மகள் இந்திரஜா சங்கருக்கு கோலாகலமாக திருமணம் செய்து வைத்து பல சவரன் நகைகள் பூட்டி சொகுசு கார் ஒன்றையும் சீதனமாக கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மேலும், யூடியூப் சேனல் ஒன்றில் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அதை பார்த்த ரசிகர்கள் ஹல்தி நிகழ்ச்சியிலேயே நெகட்டிவ் கமெண்ட்டுகளை போட ஆரம்பித்த நிலையில், திருமண வீட்டில் சந்தோஷமாக இல்லாமல் எல்லோரும் அழுது கொண்டிருந்ததாக அதே சேனலில் குடும்பத்துடன் திருமணத்துக்கு முன்பாக பேட்டியளித்துள்ளனர்.

தங்கத்தால் ஆன புடவையை இந்திரஜா கட்டியிருந்ததாக கூறப்படும் நிலையில், அவரது ஜாக்கெட் டிசைனில் உள்ள விஷயம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தடபுடல் திருமணம்: ஹல்தி, மெஹந்தி, சங்கீத் என்பதெல்லாம் வட இந்திய ஸ்டைல் திருமணம் எனக் கூறப்படும் நிலையில், ஹல்தியில் தொடங்கி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, திருமணம், குலதெய்வ கோயிலில் கெடா வெட்டி விருந்து என தடபுடலாக திருமணம் நடைபெற்றது. இந்திரஜா சங்கரின் திருமணம் தான் சில நாட்களாக அனைத்து இடங்களிலும் பெரும் பேச்சாக அடிபட்டு வருகிறது.
ஜாக்கெட் டிசைன்: பிகில், விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்த இந்திரஜா சங்கர் சர்வைவர் தமிழ் ரியாலிட்டி ஷோவிலும் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், அதற்காக கமல்ஹாசனை சந்திக்கவில்லை தனது திருமணத்துக்காக சந்தித்தார் என்று கூறினர். திருமணத்துக்காக இந்திரஜா சங்கர் அணிந்திருந்த ஜாக்கெட்டில் ’KI’ என கை பகுதியில் கார்த்திக் மற்றும் இந்திரஜாவின் பெயரில் உள்ள முதல் எழுத்துக்களை குறிக்கும் விதமான டிசைன் உருவாக்கப்பட்டு இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், அதற்கு கீழ் தாலி போன்ற டிசைனையும் வைத்து அசத்தி உள்ளனர். இனிமேல் திருமணத்தில் பல பெண்களும் இதே போல பெயர் டிசைன்களை சேலையிலும் ஜாக்கெட்டிலும் அணிந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
சரத்குமார் வீட்டில் விருந்து: ரோபோ சங்கர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நிலையில், பலரும் அவருக்கு ரொம்பவே நட்பாகவே உள்ளனர். சமீபத்தில் திருமணம் ஆன புது ஜோடிக்கு நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா தங்கள் வீட்டில் விருந்துக் கொடுத்து அசத்தி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











