எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு.. மாமாவுடன் ரொமான்ஸ் பண்ணும் இந்திரஜா சங்கர்!

சென்னை: ரோபோ ஷங்கரின் மகள் இந்துஜாவிற்கு விரைவில் திருமணமாக உள்ள நிலையில், மாமாவை கட்டிப்பிடித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறமையால் பலரையும் கவர்ந்தவர் ரோபோ சங்கர்.

Robo shankar daughter indraja shankar cute romantic photos

ரோபோ சங்கர் வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

ரோபோ சங்கர்: வெள்ளித்திரையில் ஏராளமான நடிகர், நடிகைகள் இருக்கிறார்கள் இருந்தாலும், ரோபோ சங்கர் விஜய்காந்த் போல பேசி, அவரைப்போல உடல்மொழியில் அசத்தி தனக்கு என தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். பீல்டுக்கு வந்த குறுகிய காலத்திலேயே சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டுவிட்டார்.

அடுத்தடுத்த படங்களில்: ஜெயம் ரவி நடித்த தீபாவளி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரோபோ ஷங்கருக்கு ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்கள் தான் கிடைத்தது. பல ஆண்டுகள் கழித்து தனுஷுடன் மாரி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயை மூடி பேசவும் போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்திருந்தார்.

Robo shankar daughter indraja shankar cute romantic photos

முன்னணி நடிகர்களுடன்: அதன் பின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார். இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ 2002 அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்திரஜா சங்கர்: ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில், கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்திலும் அதிதி ஷங்கரின் தோழியாக நடித்திருந்தார். தற்போது இவர் சில படங்களில் ஒப்பந்தமாக நடித்து வருகிறார்.

விரைவில் திருமணம்: இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அண்மையில் குடும்பத்தோடு குல தெய்வ கோவிலில் முறை மாமனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் யார் இவர் என்று கேட்க, என் மாமா விரைவில் திருமண தேதி அறிவிப்பு வரும் என்று கூறியிருந்தார்.

Robo shankar daughter indraja shankar cute romantic photos

வாழ்நாள் முழுவதும் உன்னுடன் நான்: இதையடுத்து, முறை மாமானின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று கட்டிப்புடி வைத்திய முறையில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். மேலும், என் கடினமான மற்றும் மகிழ்ச்சியான காலங்கள் அனைத்திலும் நீ இருந்தாய்... வாழ்நாள் முழுவதும் நான் உன்னுடன் இருக்க விரும்புகிறேன்... எல்லா குட்டி குட்டி சண்டைகளுக்கும் மன்னிக்கவும். நான் உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்... ஐ லவ் யூ மாமா என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X