Robo Shankar: ரோபோ சங்கரின் கடைசி ஆசை இதுவா.. மகள் இந்திரஜாவின் உருக்கமான பதிவு!
சென்னை: சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இரவில், ரோபோ சங்கர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் யாருமே நம்பவில்லை. பலரும் அதை ஒன்றுக்கு பலமுறை ரீசெக் செய்தார்கள். மேலும் பலரோ, அது பொய்யாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். ஆனால் நம்மை வந்தடைந்த செய்தி உண்மைதான். ரோபோ சங்கர் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவிழா மேடைகள், சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்திலும் மக்களை சிரிக்க வைத்தவர் ரோபோ சங்கர். அவரது மறைவால் அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் எந்த அளவுக்கு வருத்தப்பட்டார்களோ, அதே அளவுக்கு ரசிகர்களும் தாளாத துக்கத்தில் தவித்தார்கள். அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் வரை இருந்து அதன் பின்னர் வீடு திரும்பிய ரசிகர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
இந்நிலையில் அவரது அஸ்தியை கங்கையில் கரைக்க மொத்த குடும்பமும் வாரணாசிக்குச் சென்றிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இத்துடன் அவர் தனது மனக்குமுறலை எழுதி உள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், " கனத்த இதயத்துடன், உங்களை தேடும் உங்கள் மகள் எழுதுகிறேன்... உங்கள் கையைப் பிடிச்சு நான் பார்த்த உலகமே எனக்கு எல்லாம்னு நினைச்சேன், நான் நடக்க ஆரம்பிச்சதும், சிரிச்சதும், பயந்ததும்...
எல்லா நேரத்திலும் எனக்கு துணை நின்றது உங்க கைதான், அப்பா. ஆனா இன்று...
அதே கையால நான் உங்க அஸ்திய கொட்டுவேன் என்று எதிர்பார்க்கல.
தேட முடியாத இடத்துல நான் உங்களை தொலைச்சிட்டேன் அப்பா. "நீங்க திரும்பி வருவீங்க"ன்னு ஒரு குட்டி குழந்தை போல நம்பிக்கையோட காத்திருக்கிறேன்.
இது சாத்தியமே இல்லன்னு தெரியும்...
ஆனா உங்களை மீண்டும் ஒருமுறை பார்க்கணும்,"அப்பா"ன்னு சொல்லணும்,
ஒரு தடவை உங்க கையைப் பிடிக்கணும் என்ற ஆசை...உங்க சிரிப்பு...
உங்க குரல்...
உங்க நடையொலி...
எதுவுமே மறையல, அப்பா.

அங்கே இருந்து என்மேல ஒரு கையை வைங்க, அப்பா...
இந்த நிமிடம் வரை உங்களை ரொம்ப miss பண்றேன் அப்பா...
எனக்கு ஈடு செய்ய முடியாத உயிர் நீங்க அப்பா...
miss u and love u அப்பா....
சிங்கம் பெற்ற பிள்ளை என்று, ஊரே சொல்லும் ஓசையோடு
ஒய்யாரமாக ஓய்வெடுக்கின்றேன்..." என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த எமோஷனலான பதிவுக்கு பலரும் இந்திரஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











