கைநிறைய மருதாணி.. ‘இதுதானா’ பாடலுக்கு நடனமாடிய இந்திரஜா சங்கர்.. திருமணத்துக்கு ரெடியாகிட்டாரே!

சென்னை: காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கரின் திருமணம் இன்று மதுரையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. தனது அம்மாவின் தம்பியான கார்த்தி என்பவரையே இந்திரஜா சங்கர் திருமணம் செய்துக் கொள்கிறார். விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்த இந்திரஜா சங்கர் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட நிலையில், இன்று திருமணம் நடைபெறுகிறது.

திருமணத்துக்கு முன்னதாக அதற்கு தயாராகும் விதமாக மெஹந்தி போட்டுக் கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் இந்திரஜா சங்கர்.

Robo Shankar daughter Indraja Shankar getting ready for her wedding with Mehendi

ரோபோ சங்கர் மகள்: அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா எனக்கு கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார் இந்திரஜா சங்கர். முதல் படத்திலேயே அவரது நடிப்பு அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. ரோபோ சங்கரின் மகள் சூப்பராக நடிக்கிறாரு என பாராட்டுக்களை அள்ளினார். அதன் பின்னர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் இந்திரஜா சங்கர்.

விருமன் படத்தில்: கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் அதிதியின் தோழியாக இந்திரஜா ஷங்கர் நடித்திருந்தார். கோவை சரளாவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெண் காமெடியன்களுக்கான பற்றாக்குறை நுழைவு வரும் நிலையில், அந்த இடத்தை இந்துஜா நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக நிச்சயதார்த்தம் செய்து இன்று திருமணமும் செய்துக் கொள்ள உள்ளார்.

இந்திரஜா சங்கர் நிச்சயதார்த்தம்: நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ஷங்கரின் நிச்சயதார்த்தம் கடந்த மாதம் கோலாகலமாக நடைபெற்றது. பல சினிமா பிரபலங்கள் அந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளை கோலத்தில் கார்த்தியும் பட்டு சேலையில் மணமகளாக இந்திரஜாவும் மாலை மாற்றிக் கொண்ட காட்சிகள் மற்றும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் உள்ளிட்டவை வெளியாகின.

ஹல்தி கொண்டாட்டத்தில் வந்த அழுகை: பாலிவுட் நடிகைகள் எல்லாம் ஹல்தி என நலங்கு கொண்டாட்டத்தை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில், நாமும் செய்யலாமே என ஹல்தி வீடியோவை வெளியிட இது தமிழ்நாட்டு கலாச்சாரமே இல்லை என்றும் மதுரையில் திருமணத்தை வைத்துக் கொண்டு வடநாட்டு கலாச்சாரத்தை திணிக்கிறீங்களே என ஏகப்பட்ட ட்ரோல்கள் வந்த நிலையில், திருமண வேலைக்கு நடுவே அதை எல்லாம் படித்துப் பார்த்து விட்டு குடும்பத்துடன் அழுது புலம்பியதாக இந்திரஜா சமீபத்திய பேட்டியில் கூறியதும் ட்ரோல் செய்யப்பட்டது.

கை நிறைய மெஹந்தி: ஹல்தியை தொடர்ந்து மெஹந்திக்கும் ஒரு நிகழ்ச்சியை வைக்கிறாரா என பார்த்தால், ஆளே இல்லாமல் மேக்கப் உமனை மட்டும் வைத்துக் கொண்டு கை நிறைய மருதாணி போட்டுக் கொண்ட வீடியோவை மணப்பெண் இந்திரஜா சங்கர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். சாமி படத்தில் வரும் "இதுதானா.. இவன்தானா" பாடலை பேக்கிரவுண்டாக போட்டு அசத்தி உள்ளார்.

பிரபலங்களுக்கு அழைப்பு: ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி என அனைத்து சினிமா பிரபலங்களுக்கும் குடும்பத்துடன் நேரில் சென்று ரோபோ சங்கர் தனது மகள் இந்திரஜா சங்கரின் திருமணத்துக்கு வந்தே ஆக வேண்டும் என பத்திரிகை வைத்துள்ளார். மதுரையில் நடைபெற உள்ள திருமணத்துக்கு யாரெல்லாம் பங்கேற்க உள்ளனர் என்பது விரைவில் தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X