ரோபோ ஷங்கர் மகள் திருமணம் .. மாப்பிள்ளை தாலி கட்டினதும் கண்கலங்கிய இந்திரஜா!

சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஷங்கருக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. முறைமாமன் தாலி கட்டியதும் ஆனந்தத்தில் இந்திரஜா கண்கலங்கிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. திருமண பந்தத்தில் இணைந்த இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஃபேவரெட் காமெடியன் ரோபோ ஷங்கர். சன் டிவியில் அசத்த போவது யாரு, விஜய் டிவியில் கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தை ஈர்த்தவர். அவர் கேப்டன் விஜயகாந்த் போல் நடனம் ஆடுவதில், அவர் போல பேசுவதில் வல்லவர்.

Robo shankar Daughter indraja shankar got married today

ரோபோ ஷங்கர்: கமலின் வெறித்தனமான ரசிகரான ரோபோ ஷங்கர், பல முயற்சிகளுக்கு பிறகு வெள்ளித்திரை பக்கம் சென்றார். பல படங்களில் நடித்தார். தற்போது வெள்ளித்திரை காமெடி மற்றும் குணசித்திர நடிகராக வலம் வருகிறார். தனது கணவரைப்போல இவரின் மனைவி பிரியங்காவும் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையும் அனைவருக்கும் தெரிந்த முகம் தான்.

இந்திரஜா ரோபோ ஷங்கர்: இவரது ஒரே மகள் இந்திரஜா ஷங்கர் பிகில் படத்தில் பாண்டியம்மா கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. அதன் பின்பு ஜீ தமிழில் ஒளிப்பரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனைத்தொடர்ந்து விருமன் படத்தில் அதிதி சங்கரின் தோழியாக நடித்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், தந்தையுடன் சேர்ந்து விதவிதமான ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டு அசத்துவதில் வல்லவர். இவர் பதிவிடும் வீடியோக்களுக்கு லைக்ஸ் குவியும். அதே போல் அடிக்கடி ஃபோட்டோஷூட் படங்களையும் இவர் வெளியிடுவார்.

Robo shankar Daughter indraja shankar got married today

முறைமாமன்: நடிகை இந்திரஜாவுக்கு தனது அம்மாவின் தம்பியான முறை மாமன் கார்த்திக்குடன் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதற்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணிகளும் தொடங்கப்பட்டு, சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்து திரைப்பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. அதே போல கடந்த வாரம் நட்சத்திர ஓட்டலில் ஹல்தி விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இன்று திருமணம்: இந்நிலையில், ரோபோ ஷங்கரின் சொந்த ஊரான மதுரையில் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. மணமகள் இந்திரஜாவிற்கு முறை மாமன் கார்த்திக் தாலி கட்டியதும், இந்திரஜா ஆனந்தத்தில் கண்கலங்கினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இன்று திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X