கல்யாணம் பண்ண போறேன்.. ப்ளீஸ் அப்படி பேசாதீங்க ரொம்ப வலிக்குது..வருத்தப்பட்ட இந்திரஜா சங்கர்!

சென்னை: ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவிற்கு நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில், கல்யாணம் பண்ண போறேன், தயவு செய்து என்னை திட்டாதீங்க என்று பேட்டி ஒன்றில் வருத்தப்பட்டு பேசி உள்ளார். இந்திரஜா ஷங்கர் அவரின் முறை மாமன் கார்த்திக்கை திருமணம் செய்ய உள்ளார். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் ரோபோ சங்கர். காமெடியனாக என்ட்ரி கொடுத்த இவர் தற்போது, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். இவரின் மகள், இந்திரஜா சங்கர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு நடிகையாக பிரபலமானார். அதைத் தொடர்ந்து கார்த்தியின் விருமன் படத்திலும் நடித்துள்ளார்.

Robo shankar Daughter indraja Shankar interview about Negative comments

இவருக்கு நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில், ஒருவாரத்திற்கு முன்பே இவர்களின் திருமண கொண்டாட்டம் களை கட்ட தொடங்கிவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற ஹல்தி பங்க்ஷனில், பல திரைப்பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்களின் திருமணம் ரோபோ சங்கர் சொந்த ஊரான மதுரையில் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் பிரமாண்டமாக வரவேற்பு நடைபெற உள்ளது.

திட்டாதீங்க ப்ளீஸ்: இந்நிலையில், நடிகை இந்திரஜா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஹல்தி பங்ஷன் வச்ச போது பலர் திட்டினார்கள். ஹல்தி பங்ஷன் நார்த் இந்தியன் பங்ஷன் அதை ஏன் நீங்க பண்றீங்க, நம்ம கலாச்சாரம் எங்க போச்சு, ஓவர் சீன் அப்படி இப்படினு நிறைய கமெண்ட்டுகள் வந்துச்சு. நான் ஏன் ஹல்தி பங்ஷன் வெச்சேன் என்றால், நலங்கு வைப்பது பெரியவர்கள் தான் வைப்பார்கள். ஆனால், ஹல்தியில் அப்படி இல்லை குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் வைக்கலாம். அந்த நிகழ்ச்சியில அனைவரும் ஜாலியாக ஆட்டம் போட்டு ஆடி இருந்தார்கள். அந்த ஆறு மணி நேரம் நாங்க எங்களை மறந்துவிட்டோம்.

மனசு வலிக்கிறது: ஆனால் கமெண்ட்டில் பார்க்கும் போது ரொம்ப வருத்தமாக இருந்தது. நார்மலா நெகடிவ் கமெண்ட் கொடுப்பது வேற விஷயம், எனக்கு கல்யாணம் ஆகும் நேரத்தில் இந்த மாதிரி கமெண்ட்டுகளை பார்க்கும் போது மனசு ரொம்ப வலிக்கிது. இந்த நேரத்தில் தான் நான் ஒரு நடிகையாக இருப்பதை நினைத்து ரொம்ப வருத்தப்படுகிறேன். நடிகர்களின் வாழ்க்கை ரொம்ப பப்ளிக்காகிவிட்டது. யார் வேண்டுமானாலும் திட்டலாம் என்று நினைத்து வாய்க்கு வந்ததை திட்டி வருகிறார்கள்.

மனசார வாழ்த்துங்கள்: உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் அந்த வீடியோவை பார்க்குறீங்க, அடுத்த வீடியோவை பார்க்கலாமே அதைவிட்டுவிட்டு, இந்த நேரத்தில் மோசமான கமெண்ட்டுகளை போடுவது கஷ்டமாக இருக்கிறது. அப்படி உங்களுக்கு எதாவது சொல்லவேண்டும் என்றால், தனிப்பட்ட முறையில் சொல்லுங்க ஒருத்தர் அப்படி கருத்தை பகிர்வதால், அடுத்து வருபவர்களும் திட்டுகிறார்கள். தயவு செய்து மனசார வாழ்த்துங்கள் என்று நடிகை இந்திரஜா அந்த வீடியோவில் வருத்தப்பட்டு பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X