ஒரு வாரத்திற்கு முன்பே கொண்டாட்டம் ஆரம்பம்..மகளின் நலங்கு நிகழ்ச்சியில் மாஸ் காட்டிய ரோபோ ஷங்கர்!
சென்னை: ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கரின் திருமணம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில் நேற்று நலங்கு வைக்கும் நிகழ்ச்சியை தடபுடலாக நடந்து முடிந்துள்ளது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கொண்டு நலங்கு வைத்து மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரோபோ ஷங்கர். தனது கடுமையான உழைப்பாலும், தனது திறமையாலும் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளார். சின்னத்திரையில் மட்டுமே கலக்கி வந்த ரோபோ ஷங்கர் ஜெயம் ரவி நடித்த தீபாவளி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்திரஜா ஷங்கர்: அப்பாவை போல இவரது மகள் இந்திரஜாவிற்கும் நடிப்பில் ஆர்வம் இருந்ததால் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர், அடுத்தாக விருமன் திரைப்படத்தில் அதிதி ஷங்கரின் தோழிலாக நடித்திருந்தார். இதுமட்டுமில்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், திடீரென முறைமாமாவுடன் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக மாமாவுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து அறிவித்து இருந்தார்.
இந்த மாதம் திருமணம்:இதையடுத்து இந்திரஜாவுக்கும் அவரது மாமா கார்த்திக்கிற்கும் கடந்த பிப்ரவரி 2ம் தேதி சென்னையில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுக்கு மார்ச் மாதம் 24ந் தேதி மதுரையில் உள்ள ஜேபி மஹாலில் திருமணம் நடைபெற உள்ளது. நிச்சயதார்த்தம் விட மகளின் திருமணத்தை ரோபோ சங்கர் பிரமமண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார். மார்ச் 23ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ரிசப்ஷன் நிகழ்ச்சியும் அடுத்த நாள் காலையில் திருமணமும் நடைபெற உள்ளது. இதற்காக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் முதல் அனைவருக்கும் குடும்பத்தினருடன் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்துள்ளார் ரோபோ சங்கர்.

நலங்கு நிகழ்ச்சி: இந்நிலையில், நேற்று இந்திரஜா ஷங்கருக்கும் அவரது மாமா கார்த்திக்கிற்கும் நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை திருமணம் போல அமர்கலப்படுத்திவிட்டார் ரோபோ ஷங்கர். இதில் சின்னத்திரை பிரபலங்களான நாஞ்சில் விஜயன், ராஜ்கமல், விஜே பிரியாங்கா என பலரும் கலந்து கொண்டனர். இந்த நலங்கு வைக்கும் நிகழ்ச்சிக்காக இந்திரஜா வெள்ளை நிறத்தில் மஞ்சள் பூ போட்ட லெகங்கா அணிந்து இருந்தார். மேலும் அதற்கு மேட்சாக மலர்களால் ஆன நெக்லஸ் அணிந்து இருந்தார். ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டமாக நடைபெற்ற இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











