மகனின் முதல் பிறந்த நாள்.. அப்பாவை மறக்காத இந்திரஜா.. கண்ணீருடன் கொண்டாட்டம்!
சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வாலும், நடிப்பாலும் தனக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருந்தார். தொலைக்காட்சியில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை சிரிக்க வைத்தஇவர், பின் நாளில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். கடந்த செப்டம்பர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
ரோபோ சங்கருக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார். இனி ரோபோ சங்கர் கதை முடிந்தது அவர் இனி மீண்டு வர மாட்டார் என அனைவரும் பேசிய நினையில், கடுமையான போராட்டத்திற்கு பின் பிரியங்கா, அவரை மீட்டு கொண்டு வந்தார். இதையடுத்து, மகள் இந்திரஜாவின் திருமணத்தை நடத்தி பார்க்க ஆசைப்பட்டார்.

இந்திரஜா சங்கர்: இதையடுத்து, பிரியங்காவின் தம்பி கார்த்திக்கை இந்திரஜாவிற்கு திருமணம் செய்துவைத்தார். இவர்களின் திருமணம் ஜாம் ஜாம் என அனைவரும் வியக்கும் பார்க்கும் வகையில் நடந்தது. இதில், வெள்ளித்திரை பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். அந்த நேரத்தில் எந்த சோசியல் மீடியா பக்கம் சென்றாலும் இந்திரஜாவின் திருமணத்தை பற்றிய செய்தி தான் இருந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20ந் தேதி இந்திரஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. ரோபே சங்கர் கமலின் தீவிர ரசிகர் என்பதால், தனது பேரனுக்கு நடிகர் கமல்ஹாசன் பெயர் வைக்க வேண்டுமென ஆசைப்பட்டார். இதையடுத்து கமல், நட்சத்திரன் என பெயர்வைத்தார்.
பிறந்த நாள் பார்ட்டி: இந்நிலையில், நட்சத்திரனின் முதல் பிறந்த நாள் இன்று தடபுடலாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாள் விழாவில், ரோபோ சங்கர் வாழ்த்து சொல்லும்படி இருக்கும் வீடியோ போட்டு, கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அந்த தருணத்தில் ரோபே சங்கர் இல்லாததை நினைத்து ஒட்டுமொத்த குடும்பமும் கண் கலங்கினார்கள். இந்த பிறந்த நாள் விழாவில் உறவினர்கள், நெருங்கி நண்பர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டோவை இந்திரஜா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பலர் குட்டி பாப்பா நட்சத்திரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











