திருமணமாகி மூன்றே மாதங்கள்தான்.. செம நியூஸ் சொன்ன இந்திரஜா.. அடுத்த கட்டத்துக்கு தயார்

சென்னை: கோலிவுட்டில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா அவரது உறவினர் பையன் கார்த்திக் என்பவரை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் மதுரையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திரையுலகினர் கலந்துகொள்வதற்காக திருமண ரிசப்ஷன் சென்னையில் நடந்தது. இந்தச் சூழலில் திருமணமாகி மூன்று மாதங்களில் இந்திரஜா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையால் பலரையும் கவர்ந்தவர் ரோபோ சங்கர். விஜயகாந்த் போல் அச்சு அசலாக உடல்மொழியையும், மிமிக்ரியையும் கொடுத்து அதகளமும் செய்தார். சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கேற்ப திரைப்படங்களிலும் அறிமுகமானார் ரோபோ சங்கர்.

Robo Shankar Indraja Karthick

குவிந்த பட வாய்ப்புகள்: அதன்படி தனுஷுடன் மாரி, எழில் இயக்கத்தில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயை மூடி பேசவும் என தொடர்ந்து பல படங்களில் நடித்த ரோபோ சங்கர் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தார். சின்னத்திரை போலவே வெள்ளித்திரையிலும் ரோபோ சங்கர் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். கமல் ஹாசனின் தீவிர ரசிகர் ரோபோ சங்கர் என்பது நினைவுகூரத்தக்கது.

உடல்நலக்குறைவு: ரோபோ ஷங்கர் நிறைய படங்களில் கமிட்டாகிவந்த சூழலில் திடீரென அவரது உடல் எடை ரொம்பவே சரிந்தது. ஆஜானுபாகுவாக இருந்த ரோபோசங்கர் உடல் மெலிந்து பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சியளித்தார். அவரை பார்த்த பலரும் ரோபோ சங்கருக்கு என்னாச்சு என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கினார். மேலும் ரோபோ சங்கரின் உடல்நிலை மோசமானதற்கு குடிதான் காரணம் என்று பலர் பேசினர். அதனை ரோபோ சங்கரும் ஒத்துக்கொண்டார். மேலும் இப்போது மது பழக்கத்திலிருந்து முழுவதுமாக மீண்டு வந்திருக்கும் அவர் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.

ரோபோவின் மகள்: இதற்கிடையே ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். இவர் அட்லீ இயக்கத்தில் உருவான பிகில், முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பிகில் படத்தில் அவர் ஏற்றிருந்த பாண்டியம்மாள் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்த அவர் அதற்காக பாராட்டையும் பெற்றார். இந்தச் சூழலில் அவர் கார்த்திக் என்பவரை காதலித்துவந்தார். அவருக்கும் கார்த்திக்குக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடத்திவைக்க முடிவானது. அதன்படி திருமணம் மதுரையிலும், ரிசப்ஷன் சென்னையிலும் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது.

குட் நியூஸ் சொன்ன இந்திரஜா: இந்நிலையில் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா ஒரு குட் நியூஸை சொல்லியிருக்கிறார். அதன்படி விஜய் டிவியில் நடைபெறவிருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் இந்திரஜாவும், கார்த்திக்கும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இதனை இந்திரஜாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X