நான் செய்த தவறுகளை.. சர்ச்சைகள் பற்றி எரியுது.. ரோபோ சங்கர் மகள் என்ன சொல்லிருக்காங்க பாருங்க
சென்னை: கோலிவுட்டில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா கார்த்திக் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சமீபத்தில்தான் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததிலிருந்து இந்திரஜாவை சுற்றி சர்ச்சைகளும் உருவாகின்றன. அதாவது சில நிறுவனங்களின் ப்ரோமோஷனுக்காக தனது குழந்தையை பயன்படுத்துகிறார் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையால் பலரையும் கவர்ந்தவர் ரோபோ சங்கர். விஜயகாந்த் போல் அச்சு அசலாக உடல்மொழியையும், மிமிக்ரியையும் கொடுத்து அதகளமும் செய்தார். சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கேற்ப திரைப்படங்களிலும் அறிமுகமானார் ரோபோ சங்கர்.
பட வாய்ப்புகள் குவிந்தன: அதன்படி தனுஷுடன் மாரி, எழில் இயக்கத்தில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயை மூடி பேசவும் என தொடர்ந்து பல படங்களில் நடித்த ரோபோ சங்கர் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தார். சின்னத்திரை போலவே வெள்ளித்திரையிலும் ரோபோ சங்கர் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். கமல் ஹாசனின் தீவிர ரசிகர் ரோபோ சங்கர் என்பது நினைவுகூரத்தக்கது.
மறு பிறப்பெடுத்த ரோபோ: ரோபோ ஷங்கர் நிறைய படங்களில் கமிட்டாகிவந்த சூழலில் திடீரென அவரது உடல் எடை ரொம்பவே சரிந்தது. ஆஜானுபாகுவாக இருந்த ரோபோசங்கர் உடல் மெலிந்து பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சியளித்தார். அவரை பார்த்த பலரும் ரோபோ சங்கருக்கு என்னாச்சு என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கினார். மேலும் ரோபோ சங்கரின் உடல்நிலை மோசமானதற்கு குடிதான் காரணம் என்று பலர் பேசினர். அதனை ரோபோ சங்கரும் ஒத்துக்கொண்டார். எப்படியோ நோயிலிருந்து மீண்டு இப்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறார்.

மகள் இந்திரஜாவுக்கு திருமணம்: இதற்கிடையே ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். இவர் அட்லீ இயக்கத்தில் உருவான பிகில், முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பிகில் படத்தில் அவர் ஏற்றிருந்த பாண்டியம்மாள் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்த அவர் அதற்காக பாராட்டையும் பெற்றார். இந்தச் சூழலில் அவர் கார்த்திக் என்பவரை கடந்த வருடம் திருமனம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் படு பிரமாண்டமாக நடந்தது. அவர்களுக்கு சமீபத்தில்தான் ஆண் குழந்தை பிறந்தது.
விளக்கமளித்த தம்பதி: சூழல் இப்படி இருக்க குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே அக்குழந்தைக்கு மூளை வளர்ச்சிக்கான பயிற்சி கொடுத்த வீடியோவை இந்திரஜா வெளியிட்டிருந்தார். அதனைப் பார்த்த நெட்டிசன்கள் He guru என்ற நிறுவனத்துக்காக தனது குழந்தையை வைத்து ப்ரோமோஷன் செய்கிறார்கள் என பல விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து கார்த்திக்கும், இந்திரஜாவும் அதுகுறித்து விளக்கமும் அளித்தார்கள்.
புதிய வீடியோ: ஆனால் அவர்கள் அளித்த விளக்கத்திலும் பல பொய்யான தகவல்கள் இருந்தன என்று பலமாகவே பேசப்பட்டது. இந்நிலையில் இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு நடந்த பூஜையில், 'நான் செய்த் பிழைகளை எல்லாம் பொறுப்பாய் அம்மா' என்று பாடியிருக்கிறார். அதுதொடர்பான வீடியோதான் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











