Big Boss 7 - பிக்பாஸ் 7ல் களமிறங்கும் விஜய் பட நடிகை?.. வந்தா சூப்பரா இருக்குமே.. இதோ லேட்டஸ்ட் தகவல்

சென்னை: Robo Shankar Daughter (ரோபோ ஷங்கர் மகள்) பிக்பாஸ் சீசன் 7ல் விஜய் படத்தில் நடித்த நடிகை கலந்துகொள்ளவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 6 சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. கடந்த சீசனில் ஜிபி முத்து, தனலட்சுமி, அசீம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன் உள்ளிட்ட 20 பேர் கலந்துகொண்டனர். அந்த சீசனில் ஷிவினுக்கு, விக்ரமனுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். முக்கியமாக அறம் வெல்லும் என்ற வார்த்தையை விக்ரமனுக்காக சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யவும் ஆரம்பித்தனர். ஆனால் கடைசியில் அசீம் பிக்பாஸ் ஆறாவது சீசன் டைட்டிலை வென்றுவிட்டு சென்றார்.

Robo Shankar Daughter Pandiyamma Participate in Big Boss 7

பிக்பாஸ் 7ல் இரண்டு வீடுகள்: இந்தச் சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது. இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியானது. எப்போதும் ஒரு வீட்டில் நடக்கும் பிக்பாஸ் இந்த முறை இரண்டு வீடுகளில் நடக்கப்போவதாக சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் கமல் ஹாசன் அறிவித்திருந்தார். இரண்டு வீடுகளில் நடக்கும் போட்டியை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இதுதான் லிஸ்ட்டா?: பிக்பாஸ் ஏழாவது சீசனில் நடிகர் அப்பாஸ், பப்லு, சந்தோஷ் பிரதாப் கோவையில் பேருந்து ஓட்டிய ஷர்மிளா, நடிகை அம்மு அபிராமி, தர்ஷா குப்தா, வி.ஜே.ரக்‌ஷன், ஜாக்குலின், காக்கா முட்டையில் நடித்த விக்னேஷ், நடன அமைப்பாளர் ஸ்ரீதர், மாடல்கள் ரவிக்குமார், நிலா, நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகை சோனியா அகர்வால், விஜே பார்வதி, விஜே பாவனா உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியானது.

மறுத்த ரேகா நாயர்: ஆனால் இந்தத் தகவலை நடிகை ரேகா நாயர் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். மேலும் காட்டுக்குள் போக சொன்னால்கூட நான் போவேன். ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் போகமாட்டேன். கடந்த மூன்று சீசன்களாகவே நான் பிக்பாஸில் கலந்துகொள்ளவிருப்பதாக கூறுகிறார். ஆனால் எனக்கு அதில் துளிகூட நாட்டமில்லை என்பதுதான் உண்மை என தெரிவித்திருந்தார்.

ரோபோ ஷங்கர் மகள்: இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7ல் ரோபோ ஷங்கர் மகள் பாண்டியம்மா கலந்துகொள்ளவிருக்கிறார் என்று புதிய தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. மேலும் அவருக்கு திருமணம் செய்ய ரோபோ ஷங்கர் முடிவு செய்திருக்கும் சூழலில் அவர் பிக்பாஸில் கலந்துகொள்வாரா என்ற கேள்வியையும் ஒருதரப்பினர் எழுப்புகின்றனர். இவர் விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X