வீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி: ரோபோ ஷங்கர்
சென்னை: புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அளிப்பதாக ரோபோ ஷங்கர் அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 40 பேர் பலியாகினர். அதில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியம் மற்றும் அரியலூரை சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோரும் அடக்கம்.
இந்நிலையில் இந்த கொடூர தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார் ரோபோ ஷங்கர்.
ரோபோ ஷங்கர்
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அளிப்பதாக தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் ரோபோ ஷங்கர்.
பாராட்டு
வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் ரோபோ ஷங்கரை பலரும் பாராட்டியுள்ளனர்.
உதவி
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவிட்டு அடுத்த வேலையை பார்ப்பதற்கு பதில் முடிந்த உதவியை செய்யும் ரோபோ ஷங்கரை நினைத்தால் பெருமையாக உள்ளது என்கிறார்கள் ரசிகர்கள்.
மகிழ்ச்சி
ரோபோ ஷங்கரின் செயலை பார்த்துவிட்டு பிற நடிகர்களின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











