நான் சீக்கிரம் செத்துருவேனு நிச்சேன்..மகள் கல்யாண நேரத்தில் கண்கலங்கி பேசிய ரோபோ ஷங்கர்!
சென்னை: பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கரின் திருமண கொண்டாட்டம் களை கட்ட ஆரம்பித்த நிலையில், திருமண சடங்குகள் கோலாகலமாக நடந்து வருகின்றது. மகளின் கல்யாணத்தை பார்க்காமல் போய்டுவேனு நினைச்சேன், மகளின் திருமண நேரத்தில் கண்கங்கிய ரோபோ ஷங்கர்.
சின்னத்திரையில் காமெடியனாக அறிமுகமான நடிகர் ரோபோ ஷங்கர், சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இடையில் உடல் நல குறைவு காரணமாக உடல் எடை மெலிந்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருந்தார் நடிகர் ரோபோ சங்கர். பின் மனைவி மற்றும் மகளின் அன்பால் பழைய நிலைக்கு திரும்பி மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

ஹல்தி பங்க்ஷன்: இவரது மகள் இந்திரஜாவிற்கும் அவரது முறைமாமன் கார்த்திக்கிற்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இதையடுத்து கடந்த வாரம் இருவரின் ஹல்தி பங்க்ஷன் சென்னையில் மிகவும் உற்சாகமாக நடைபெற்றது.இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டுப்பாடி அமர்க்களப்படுத்தினர்.
இந்திரஜா,கார்த்திக்: இந்நிலையில் நேற்று இந்திரஜா மற்றும் கார்த்திக்கிற்கு மதுரையில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக அனைவரும் காரில் விமான நிலையத்திற்கு சென்று கொண்டு இருக்கும் போது, மகள் திருமணம் குறித்து ரோபோ ஷங்கர் பேட்டி அளித்துள்ளார். அதில், என் மகளுக்கு திருமணத்தை காண ஆவலாக இருக்கிறேன். அவளை ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்றார். அதே போல அவ இப்போ இருக்கும் வீட்டுக்கு பக்கத்துலேயே தான், இந்திரஜாவும் வீடு பார்த்து இருக்குற, வழக்கம் போல அப்பா பால் வாங்கிட்டு வா, காய் வாங்கிட்டு வானு தொல்லை கொடுப்பா என்றார்.
என் அட்வைஸ்: என் கல்யாணம் சாதாரண கல்யாணமாக நடந்தது. ஆனால், என் மகளின் கல்யாணம் கட்சித் தலைவரின் மகளுக்கு நடப்பது போல பிரம்மாண்டபமாக நடக்கப்போகிறது. எது எப்படி இருந்தாலும் கல்யாணத்திற்கு பிறகு, நல்ல மனைவியாக நல்ல மகளாக சாதாரணமான பெண்ணாக வாழ்க்கையை அவள் நடத்த வேண்டும் என்பது தான் இந்திரஜாவிற்கு நான் கொடுக்கும் அட்வைஸ் என்றார்.
மனைவி தான் காரணம்: தொடர்ந்து பேசிய ரோபோ ஷங்கர், நான் என் மகளின் திருமணத்தை பார்ப்பேனா, மாட்டேனா என்று நினைத்தேன், பலரும் திருமணத்தை இவ்வளவு சீக்கிரம் செய்ய காரணம் என் உடல்நிலை என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், இன்றைக்கு மாப்பிள்ளை போல நான் ஜம்முனு இருக்கேன் அதற்கு காரணம் என் மனைவி பிரியங்கா நான் என்று அந்த பேட்டியில் ரோபோ ஷங்கர் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











