நயன்தாரா குற்றச்சாட்டை விடுங்க.. தனுஷ் பற்றி பிரபல நடிகர் என்ன சொல்றாரு பாருங்க
சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக அவரது 50ஆவது படமான ராயன் படம் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. தற்போது அவர் குபேரா, இட்லி கடை ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இவற்றில் இட்லி கடை படத்தை அவரே இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களாகவே தனுஷ்தான் சினிமாவின் தலைப்பு செய்தியாக இருக்கிறார்.
காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான தனுஷ் இதுவரை 50 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவர் தனது திறமையை வளர்த்துக்கொண்டே வந்ததால் இந்தியாவிலேயே மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரையும் அவர் பெற்றிருக்கிறார். மேலும் தேசிய விருதுகளையும் அவர் அள்ளியிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ராயன் திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றது. அந்தப் படத்தை அவரே இயக்கியதும்; அது அவருக்கு 50ஆவது படமென்பதும் குறிப்பிடத்தக்கது.

வரிசையாக படங்கள்: அடுத்ததாக அவரது நடிப்பில் குபேரா படம் வெளியாகவிருக்கிறது. இதில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சேகர் கம்முல்லா இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் தெலுங்கு மார்க்கெட்டில் தனக்கான ஒரு இடத்தை உறுதி செய்ய காத்திருக்கிறார் தனுஷ். இந்தப் படம் தவிர்த்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். அதில் நித்யா மேனன் ஹீரோயினாகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.
இயக்கத்திலும் பிஸி: இட்லி கடை படம் மட்டுமின்றி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார். அதில் தனுஷின் உறவினர் ஹீரோவாகவும்; அனிகா சுரேந்திரன் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. மேலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் தனுஷ். அதுமட்டுமின்றி இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என நடிப்பிலும் பிஸியாக இருக்கிறார்.

சர்ச்சைகள்: சூழல் இப்படி இருக்க தனுஷை சுற்றி சர்ச்சைகளும் அதிகரித்திருக்கின்றன. சமீபத்தில்தான் அவருக்கும் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து நடந்தது. அதேபோல் நடிகை நயன்தாராவுக்கும் தனுஷுக்கும் இடையே மோதலும் வெடித்து; நீதிமன்றத்தில் வழக்கும் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் தனுஷின் செயல்பாடுகள்தான் என்று பலரும் விமர்சித்துவரும் சூழலில்; மாரி படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த ரோபோ சங்கர் தனுஷ் குறித்து நெகிழ்ச்சியோடு பேசியிருக்கிறார்.
ரோபோ சங்கர் பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், “மாரி திரைப்படத்தில் தனுஷுடன் நடித்ததை என்னால் மறக்கவே முடியாது. அவர் எல்லோரையும் ஏற்றிவிட்டு அழகு பார்ப்பவர். என்னுடன் அவர் பழகும்போது ஒரு குழந்தையாகவே மாறிவிடுவார். அவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு மனிதனாக உயர்ந்த இடத்தில் இருக்கிறார்” என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள்; எங்கள் தனுஷை பற்றி எத்தனை பேர் அவதூறு பரப்பினாலும் அவரை கொண்டாடுவதற்கும் திரைத்துறையில் ஆள் இருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் அந்தப் பேட்டியை பகிர்ந்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











