வா வா என் உயிரே.. இந்திரஜாவுக்கு பிறந்த மகன்..உச்சக்கட்ட எமோஷனில் வீடியோ போட்ட ரோபோ சங்கர் குடும்பம்

சென்னை: காமெடி நடிகர் ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். அவருக்கு கடந்த வருடம் கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கார்த்தி சினிமாவில் உதவி இயக்குநராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் ரோபோ சங்கரின் மனைவி மூலம் குடும்பத்துக்கு பழக்கமானார். இந்தச் சூழலில் இந்திரஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதுதொடர்பாக மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

சின்னத்திரையில் கலக்கிவந்த ரோபோ சங்கரை மாரி படத்தின் மூலம் சினிமாவுக்குள் அழைத்து வந்தார் தனுஷ். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் ரோபோவின் நடிப்பு பட்டையை கிளப்பியது. அவ்வளவு அசால்ட்டாக நடித்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி வாயை மூடி பேசவும் படத்தில் அடுத்ததாக நடித்தார். அந்தப் படமும் சரியாக போகாவிட்டாலும் சங்கரின் நடிப்புக்கு அப்ளாஸ் அள்ளியது.அதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, விஸ்வாசம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

robo shankar indraja

இப்போதும் பிஸிதான்: ரோபோ சங்கர் கைவசம் இப்போதும் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. மேலும் சின்னத்திரையில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் நடுவராகவும் அவ்வப்போது வந்து செல்வார். இதற்கிடையே அவர் கமல் ஹாசனின் தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க அவருக்கு கடந்த வருடம் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதற்கு காரணம் அவரது அதீத குடி பழக்கம்தான். ஒருவழியாக எப்படியோ உடல்நலம் தேறி இப்போது முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.

மகள் இந்திரஜா: ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். அவர் விஜய் நடித்த பிகில் படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதில் அவரது கேரக்டர் தனித்து தெரிந்தது. தனது திறமையையும் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். அந்தப் படத்துக்கு அடுத்து முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் படத்தில் அதிதிக்கு தோழியாக நடித்திருந்தார். அதன் பிறகு பெரிதாக அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க அவருக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது.

நடந்து முடிந்த திருமணம்: ரோபோ சங்கரின் மனைவி மூலம்தான் கார்த்திக் அந்தக் குடும்பத்துக்கு பழக்கமானார். அவர் சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. கார்த்திக்கிற்கும், இந்திரஜாவுக்கும் கடந்த வருடம் மதுரையில் வைத்து திருமணமும், சென்னையில் வைத்து திருமண ரிசப்ஷனும் நடந்தது. அதில் திரையுலகத்தை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இந்நிலையில் இந்திரஜா கர்ப்பமானார். அதனால் சங்கரின் குடும்பம் மகிழ்ச்சியில் இருந்தது.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்திரஜாவுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அதனை ரோபோ சங்கரின் குடும்பத்தினர் சந்தோஷத்தோடு பகிர்ந்துகொண்டார்கள். தற்போது குழந்தை பிறந்தது தொடர்பாக கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ஆபரேஷன் தியேட்டருக்கு முன்பு ரோபோ சங்கர், அவரது மனைவி, கார்த்திக் மற்றும் குடும்பத்தினர் பதற்றத்தோடு காத்திருக்கிறார்கள். கொஞ்ச நேரத்துக்கு பிறகு ஆண் குழந்தையை மருத்துவர்கள் தூக்கிக்கொண்டு வெளியே வருகிறார்கள். அந்தக் குழந்தையை பார்த்ததுமே ஒட்டுமொத்த குடும்பமும் எமோஷனலாகி கண்ணீர் விடுகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவருகிறது. பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X