பேரனுடன் முதல் ரீல்ஸ் போட்ட ரோபோ சங்கர்.. உலக நாயகன் பாட்டுக்கு குடும்பமா சேர்ந்து செம லூட்டி!

சென்னை: விஜய் டிவி மூலம் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகத்தைப் பெற்றவர் ரோபோ சங்கர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் நகைச்சுவைக் கலைஞராக வலம் வந்தவர். தற்போது சின்னத்திரை மற்றும் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது மகள் இந்திரஜா சங்கர். இவரும் நடிகை. இந்திரஜா சங்கருக்கு சில மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் தனது பேரன் பிறந்த 100வது நாளில் பேரனுடன் சேர்ந்து ரிலீஸ் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்திரஜாவைப் பொறுத்தவரையில் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயரான பாண்டியம்மா எனும் பெயர் அவரை மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு சேர்த்தது. மேலும் படத்தின் கிளைமேக்ஸில் அவருக்கு கொடுக்கப்பட்ட முக்கியமான காட்சிகள் அவரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த படத்திற்கு பின்னர் இவர் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான விருமன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அதிதியின் தோழியாக படம் முழுவதும் வருவார். நடிகர் ரோபோ சங்கரின் மகள் என்ற அடையாளம் அவருக்கு இருந்தாலும் திரையிலகில் அவருக்கு என தனி அடையாளத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் இந்திரஜா சங்கர்.

Robo Shankar First Reels With His Grand Son For KamalHaasan Song - Watch Video

இந்திரஜா சங்கர்: இவருக்கும் இவரது தாய் மாமனான கார்த்திக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் காதல் மற்றும் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றது. மேலும் திரைப்பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டனர். மிகவும் கோலாகலமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. ரோபோ சங்கரின் குடும்பம் மிகவும் ஜாலியான குடும்பம் என்பதால் அவர்களின் குடும்பத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

உலக நாயகன்: இந்திரஜா சங்கர் மற்றும் கார்த்திக் தம்பதியருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. பேரனை முதன் முதலில் கையில் ஏந்தும் போது ரோபோ சங்கர் மிகவும் நெகிழ்ச்சி அடைந்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். ரோபோ சங்கரின் பேரனுக்கு உலக நாயகன் கமல்ஹாசன், நட்சத்திரன் என்ற பெயரைச் சூட்டினார்.

Robo Shankar First Reels With His Grand Son For KamalHaasan Song - Watch Video

ரீல்ஸ்: நட்சத்திரன் பிறந்து 100 நாட்கள் ஆன நிலையில் அதனை ரோபோ சங்கர் வீட்டில் அனைவரும் கொண்டாடினார்கள். அனைவரும் ஒரே நிறத்தில் துணி எடுத்து போட்டுக் கொண்டு 100வது நாளைக் வெகு சிறப்பாக கொண்டாடி உள்ளார்கள். ஏற்கனவே இந்த கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை இந்திரஜா பகிர்ந்திருந்தார். இந்நிலையில் கொண்டாட்டத்தின் போது எடுத்த ரிலீஸ் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த ரீல்ஸ் வீடியோவில் ரோபோ சங்கர் தனது பேரனை கையில் வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்துள்ளார். மற்றவர்கள் ஷோபாவை சுற்றி நின்று கொண்டு உள்ளார்கள். உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள தல் லைஃப் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் அந்த வீடியோவில் சேர்க்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X