சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
சென்னை: காமெடி நடிகர் ரோபோ சங்கர் தனது செல்ல மகள் இந்திரஜா சங்கருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், சொகுசு கார் ஒன்றை சீதனமாக கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்க புடவை, விலையுயர்ந்த நகைகள் என பல கோடி ரூபாய் செலவில் தனது மகள் இந்திரஜா சங்கருக்கு கோலாகலமாக கடந்த மார்ச் 24ம் தேதி திருமணம் செய்து வைத்தார் ரோபோ சங்கர்.
கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கும் கார்த்திக் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த விழாவே திருமணம் போல நடைபெற்ற நிலையில், மதுரையில் அதைவிட சீரும் சிறப்புமாக திருமணம் நடைபெற்றது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சூரி, விஜய்சேதுபதி, மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என பல பிரபலங்களுக்கு குடும்பத்துடன் சென்று திருமண அழைப்பிதழ்களை கொடுத்து வந்தனர். திருமண விழாவுக்கு பலர் செல்லாத நிலையில், சென்னையில் விரைவில் இன்னொரு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த ரோபோ சங்கர் திட்டமிட்டுள்ளார்.
ரோபோ சங்கர் மகள் திருமணம்: நடிகையும் ரோபோ சங்கரின் மகளுமான இந்திரஜா சங்கர் திருமணம் நடைபெற்ற பின்னரும் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு செல்வது ஊருக்கே விருந்து வைப்பது என கொண்டாட்டம் இன்னமும் ஓயவில்லை. விரைவில் சென்னையிலும், பிரம்மாண்ட திருமண வரவேற்பு விழா கோடம்பாக்கத்தில் உள்ள பிரபல நடிகர்களுக்காக நடத்தப்பட உள்ளது.
தங்கப்புடவை: இந்திரஜாவின் திருமணத்துக்கு ரோபோ சங்கர் தங்க ஜரிகையால் செய்யப்பட்ட பட்டுப் புடவையை பரிசாக கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது. மேலும், அதிகளவிலான நகைகளை போட்டு இந்திரஜாவை அப்படி அலங்கரித்திருந்தார். ஹல்தியில் ஆரம்பித்து திருமணம் முடிந்து குலதெய்வ கோயில் வழிபாடு என கொண்டாட்டம் களைகட்டி வரும் நிலையில், இந்திரஜாவும் அவரது குடும்பத்தினரும் செல்லும் கார் புத்தம் புதிய கார் என்றும் சீதனமாக வழங்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகி உள்லன.
சீதனமாக சொகுசு கார்: தனது மகள் இந்திரஜாவுக்கும் மாப்பிள்ளை கார்த்திக்கும் திருமண பரிசாக சுமார் 19 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா எலிவேட் (Honda Elevate) காரை சீதனமாக கொடுத்துள்ளார் ரோபோ சங்கர் என்றும் அதன் சன் ரூஃபை ஓபன் செய்து விட்டு வெளியே தலைகாட்டி சமீபத்தில் விசில் அடித்துக் கொண்டு அலப்பறை கிளப்பும் வீடியோவை ரோபோ சங்கர் வெளியிட்டது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
3வது மனுஷனை விடாதீங்க: மேலும், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது மகள் மற்றும் மாப்பிள்ளை கார்த்திக்கு ரோபோ சங்கர் அறிவுரை கூறும் காட்சிகளும் வெளியாகி இருந்தன. திருமண வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். மூன்றாவது மனுஷனை உள்ளே விட்டால் பிரச்சனை பெரிதாகும் தவிர சந்தோசமான வாழ்க்கைக்கு வழிவகுக்காது என அறிவுரை வழங்கினார். இது அறிவுரையை தான் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூரியும் இந்திரஜா சங்கர் மற்றும் கார்த்திக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடைபெற உள்ள திருமண வரவேற்பு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











