Robo Shankar - மகளுக்கு திருமணம்.. இரண்டாவது குழந்தைக்கு ஆசை - மனம் திறந்த ரோபோ ஷங்கர்

சென்னை: Robo Shankar (ரோபோ ஷங்கர்) தன்னுடைய மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தனக்கு இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாகவும் ரோபோ ஷங்கர் தெரிவித்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ரோபோ ஷங்கர். ஸ்டாண்ட் அப் காமெடியனாக மட்டுமின்றி நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஃபேமஸ் ஆனார். அவர் மாரி படத்தின் மூலம் பெரிய திரையில் தோன்றிய அவர் தொடர்ந்து ரஜினி, அஜித்,தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். மேலும் பல படங்களில் நடிப்பதற்கும் அவர் கமிட்டாகியிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சமீப காலமாக ஓய்வில் இருந்தார். இதன் காரணமாக கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. மேலும் ரோபோ ஷங்கருக்கு என்ன ஆயிற்று எனவும் பலர் கேள்வி எழுப்பினர்.

Robo Shankar has also revealed that he wants to have a second child

உடல்நிலை: ரோபோ ஷங்கருக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்ததாகவும் அதனால்தான் அவரது உடல் உருக்குலைந்துவிட்டதாகவும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஷங்கரின் நெருங்கிய நண்பரான நடிகர் போஸ் வெங்கட் ரோபோ ஷங்கருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஓய்வில் இருக்கிறார் விரைவில் மீண்டுவிடுவார் என தெரிவித்தார். இந்தச் சூழலில் தனக்கு மஞ்சள் காமாலை வந்ததாக ரோபோவே ஒத்துக்கொண்டார்.

மஞ்சள் காமாலை: தனக்கு மஞ்சள் காமாலை வந்துவிட்டதாக ரோபோ ஷங்கர் ஒத்துக்கொண்டதை அடுத்து குடியால்தான் வந்தது என பலரும் பேச ஆரம்பித்தனர். ஆனால், இது எல்லோருக்கும் வரும் நோய்தான். எனக்கு இந்த நோய் சிறு வயதில் ஏற்கனவே ஒருமுறை வந்திருக்கிறது. இந்த நோய் எனக்கு மீண்டும் வந்ததன் மூலம் எனது கதை முடிந்துவிட்டதாகவே பலரும் நினைத்தனர் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியிருந்தார்.

மகளுக்கு திருமணம்: இந்நிலையில் வனிதா விஜயகுமாருக்கு ரோபோ ஷங்கரும் அவரது மனைவியும் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தனர். அதில், "எனது மகள் இந்திரஜாவுக்கு 21 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் முடிவு செய்திருக்கிறோம். எங்கள் உறவிலேயே மாப்பிள்ளை பார்த்திருக்கிறோம். அவரும் சினிமாவில்தான் இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராக இருக்கும் அவர் சில ஹீரோக்களிடம் கதையும் சொல்லிவருகிறார்.

மகள் ஒத்துக்கொண்டால்: எனக்கும் 21 வயதில்தான் திருமணம் நடைபெற்றது. இந்திரஜாவிடம் இந்தத் திருமணத்திற்கு சம்மதமா என கேட்டோம். அதற்கு அவர், சம்மதம் என தெரிவித்துவிட்டார். அதுமட்டுமின்றி என்னை அவர் நன்றாகவே புரிந்துகொண்டார். அதனால் எனக்கு ரொம்பவே சம்மதம் என தெரிவித்துவிட்டார். விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. நாங்களே அதுகுறித்து அறிவிப்போம்" என்றார்.

இரண்டாவது குழந்தைக்கு ஆசை: அவரைத் தொடர்ந்து பேசிய ரோபோ ஷங்கர், "எனக்கு பேர குழந்தைகளை கொஞ்ச வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அவர்களை தூக்கிக்கொண்டு பல நிகழ்ச்சிகளுக்கு போகவும் எனக்கு விருப்பம். அதுமட்டுமின்றி எனக்கும் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள் ஆசையாகத்தான் உள்ளது. ஆனால் நைட் ஷூட்டிங் நிறைய முறை போய்விடுகிறேன்" என ஜாலியாக தெரிவித்தார். ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா விஜய் நடித்த லியோ படத்திலும், கார்த்தி நடித்திருந்த விருமன் படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X