ஒரு ஊருக்கே கிடா விருந்து.. மகள், மாப்பிள்ளைக்கு தடபுடலாக வந்த உணவு.. அமர்களப்படுத்திய ரோபோ ஷங்கர்!

சென்னை: ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கரின் திருமணம் 24ந் தேதி மதுரையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.தற்போது நடிகர் ரோபோ சங்கர் தனது மகள் மற்றும் மருமகனுக்கு தடபுடலாக விருந்து வைத்துள்ளார்.

காமெடி நடிகரான ரோபோ சங்கர் அஜித்,விஜய்,தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். விஜயகாந்த் போல நடித்தும்,பேசியும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரோபோ சங்கர் வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார். இவர் விஷ்ணு விஷால் நடித்த வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில், எம்எல்ஏ ஜாக்கெட் என்கிற வேடத்தில் நடித்திருப்பார். இதில், அன்னைக்கு காலையில ஆறு மணி என்று சொல்லியே அனைவரையும் சிரிக்க வைத்து இருப்பார்.

Robo Shankar hosted a wedding party for daughter Indraja and Karthick

ரோபோ சங்கர்: இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த ரோபோ ஷங்கர், அண்மையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார். இவர் மீட்டு வருவதே மிகவும் கஷ்டம் என்று பேச்சு எழுந்த நிலையில், கடும்போராட்டத்திற்கு பிறகு அதில் இருந்து மீட்டு வந்து, அனைவருக்கும் ஒரு முன் உதாரணமாக இருக்கிறார்.

செல்ல மகள் திருமணம்: இந்நிலையில், ரோபே ஷங்கரின் செல்ல மகள் இந்திரஜா சங்கருக்கு மார்ச் 24ந் தேதி மதுரையில் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. தனது சொந்த தாய் மாமனான கார்த்திக்கை இந்திரஜா இந்திரஜா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்ற நிலையில், தற்போது இவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், சூரி, போஸ் வெங்கட், அம்ரிதா இந்திரஜாவின் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

தடபுடல் விருந்து: கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே இந்திரஜா திருமணத்திற்கு நகை வாங்கும் வீடியோ, புடவை வாங்கும் வீடியோ, மருதாணி போட்ட வீடியோ என அனைத்தும் வைரலானது. தற்போது, ரோபோ ஷங்கர் தனது இந்திரஜாவிற்கும் மாப்பிள்ளைக்கும் மதுரையில் தடபுடலாக விருந்து வைத்துள்ளார். ஊருக்கே வைத்த கிடா விருந்தில், மட்டன் பிரியாணி, மட்டன் ப்ரை,மட்டன் சுக்கா,குடல் கூட்டு, சிக்கன் ப்ரை, மீன், சிக்கன் 65, கோலா உருண்டை, மட்டன் எலும்பு குழம்பு,சிக்கன் குழம்பு, ரசம்,தயிர், ஈரல் வறுவல் என வகைவகையாக கறிவிருந்து கொடுத்துள்ளார்.

பிகில் படத்தில்: இந்திரஜா சங்கர், விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த படத்தில் அவர் உருவ கேலிக்கு எதிராக எமோஷனலாக பேசும் டைலாக் பிரபலமாகி இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. இதையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்திலும் நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X