மகள் திருமணம்.. ரஜினி முதல் பிரபு வரை.. குடும்பத்தினருடன் அழைப்பிதழ் கொடுத்த ரோபோ சங்கர்!
சென்னை : நடிகர் பிரபுவின் குடும்பத்தினருக்கு தனது மகள் இந்திரஜாவின் திருமண அழைப்பிதழை நடிகர் ரோபோ சங்கர் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று வழங்கியுள்ளார்.
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பினார். அதன் பின்னர் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான விருமன் படத்திலும் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிரபலமடைந்தார்.

இந்நிலையில், இந்திரஜாவுக்கும் அவரது மாமா கார்த்திக்கிற்கும் கடந்த பிப்ரவரி 2ம் தேதி சென்னையில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் மார்ச் மாதம் 24 மதுரையில் உள்ள ஜேபி மஹாலில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கரின் திருமணம் நடைபெற உள்ளது. நிச்சயதார்த்தம் ஆன ஒரே மாதத்தில் மகளின் திருமணத்தை ரோபோ சங்கர் பிரமமண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.
மார்ச் 23ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ரிசப்ஷன் நிகழ்ச்சியும் அடுத்த நாள் காலையில் திருமணமும் நடைபெற உள்ளது. இதற்காக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் முதல் அனைவருக்கும் குடும்பத்தினருடன் நேரில் சென்று அழைப்பிதழ் விடுத்து வருகிறார் ரோபோ சங்கர். ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் பிரபு குடும்பத்தினருக்கு நடிகர் ரோபோ சங்கர், அவரது மனைவி மற்றும் மருமகன் கார்த்திக் ஆகியோர் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்துள்ளனர். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கலைத்துறையின் தவப்புதல்வன் செவாலியர் சிவாஜி அவர்களின் குடும்பத்தினருக்கு பத்திரிகை கொடுத்த இனிய தருணம்.. அன்பு அண்ணன் இளைய திலகம் பிரபு அவர்களின் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன் என்று புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.

ஏற்கனவே விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி, சீமான் உள்ளிட்ட பல்வேறு சினுமா பிரபலங்களுக்கு ரோபோ சங்கர் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கியுள்ளார். இதனால் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











