மகளுக்கு உடனே திருமணம்.. கமல்ஹாசன் முதல் விஜய்சேதுபதி வரை திருமண அழைப்பிதழ் கொடுக்கும் ரோபோ சங்கர்!

சென்னை: இந்த மாதம் பிப்ரவரி 2ம் தேதி தான் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கும் அவரது தாய் மாமனான கார்த்திக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த விழாவே திருமணம் போல நடைபெற்ற நிலையில், தற்போது உடனடியாக திருமணத்துக்கும் ரெடியாகி விட்டனர்.

கமல்ஹாசன், விஜய்சேதுபதி, மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என பல பிரபலங்களுக்கு குடும்பத்துடன் சென்று திருமண அழைப்பிதழ்களை கொடுத்து வருகின்றனர். அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளனர்.

Robo Shankar invites Kamal Haasan to Vijay Sethupathi for her daughter Indraja Shankar marriage

இந்திரஜா சங்கர் நிச்சயதார்த்தம்: ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பினார். அதன் பின்னர் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான விருமன் படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், அவருக்கும் அவரது மாமா கார்த்திக்கிற்கும் கடந்த பிப்ரவரி 2ம் தேதி சென்னையில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Robo Shankar invites Kamal Haasan to Vijay Sethupathi for her daughter Indraja Shankar marriage

திருமணம் எப்போது?: வரும் மார்ச் மாதம் 24 மதுரையில் உள்ள ஜேபி மஹாலில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கரின் திருமணம் நடைபெற உள்ளது. நிச்சயதார்த்தம் ஆன ஒரே மாதத்தில் மகளின் திருமணத்தை ரோபோ சங்கர் பிரமமண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார். மார்ச் 23ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ரிசப்ஷன் நிகழ்ச்சியும் அடுத்த நாள் காலையில் திருமணமும் நடைபெற உள்ளது.

Robo Shankar invites Kamal Haasan to Vijay Sethupathi for her daughter Indraja Shankar marriage

கமல்ஹாசனுக்கு அழைப்பிதழ்: நிச்சயதார்த்த விழாவுக்கே ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு ரோபோ சங்கர் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், நேற்று கமல்ஹாசனை குடும்பத்துடன் சந்தித்து பத்திரிகை மற்றும் சிறிய பரிசு எல்லாம் கொடுத்து ரோபோ சங்கர் தனது மகள் இந்திரஜாவின் திருமணத்திற்கு அழைத்திருந்தார். அதன் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Robo Shankar invites Kamal Haasan to Vijay Sethupathi for her daughter Indraja Shankar marriage

விஜய்சேதுபதிக்கு அழைப்பு: இந்நிலையில், இன்று ரோபோ சங்கர், இந்திரஜா சங்கர், மாப்பிள்ளை கார்த்திக் உள்ளிட்ட பலர் திருமணத்திற்கு விஜய்சேதுபதியை அவரது இல்லத்துக்கே சென்று நேரில் அழைப்பு விடுத்தனர். அதன் புகைப்படங்களை சற்றுமுன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

Robo Shankar invites Kamal Haasan to Vijay Sethupathi for her daughter Indraja Shankar marriage

முத்தம் கொடுத்த விஜய்சேதுபதி: எப்போதுமே தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு கன்னத்தில் முத்தம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ள விஜய்சேதுபதி மகளின் கல்யாணத்துக்கு அழைப்பு விடுக்க வந்த ரோபோ சங்கருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.

Robo Shankar invites Kamal Haasan to Vijay Sethupathi for her daughter Indraja Shankar marriage

மேலும், தமிழ் சினிமாவில் பல பிரபலங்களையும் இந்த மாத இறுதிக்குள் அழைக்க ரோபோ சங்கர் திட்டமிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X