Don't Miss!
- Automobiles
பெண் செய்த காரியத்தால் நொறுங்கிய கடை! இதனால கூட விபத்து நடக்குமா! சுத்தி இருந்த எல்லாரும் ஆடி போயிட்டாங்க!
- News
சிக்கலில் பாஜக.. இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த ஈபிஎஸ், ஓபிஎஸ்..அண்ணாமலையின் அடுத்த மூவ் இதுதான்
- Lifestyle
30 ஆண்டுகளுக்கு பின் சனி-சுக்கிர சேர்க்கை: பிப்ரவரி 15 வரை இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் தான்!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Sports
ஐசிசி தரவரிசை பட்டியல்.. ஆல் டைம் சாதனை படைக்க சூர்யகுமாருக்கு வாய்ப்பு. இன்னும் 8 புள்ளிகளே தேவை
- Finance
பர்ஸ்-ஐ பதம் பார்த்த பட்ஜெட் 2023 அறிவிப்புகள்.. அட பாவமே..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
திருமணநாள் அதுவுமா.. ரோபோ சங்கருக்கு ரஜினிகாந்த் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்.. இது போதும் தலைவா!
சென்னை: விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான ரோபோ சங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்.
ரோபோ சங்கரின் திருமண நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், ரஜினிகாந்த் அவருக்கு கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ் ரசிகர்களை உற்சாகமாக்கி உள்ளது.
குடும்பத்துடன் ரஜினிகாந்தை சந்தித்து ரோபோ சங்கர் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
குளிப்பதை
பார்த்த
அமுதவாணன்..தட்டிக்
கேட்காத
கமல்..என்னங்க
சார்
உங்க
சட்டம்..விளாசும்
நெட்டிசன்ஸ்!

ரோபோ சங்கர்
மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டான ரோபோ சங்கர் விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். பின்னர், இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஜீவா நடித்த ரெளத்திரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படத்தில் இவர் நடித்த காட்சிகள் கடைசியில் கத்தரிக்கப்பட்டன. ஆனால், மீண்டும் கோகுல் இயக்கத்தில் உருவான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்த ரோபோ சங்கர் முன்னணி காமெடி நடிகராக பிரபலமானார்.

குடும்பமே நடிகர்கள்
ரோபோ சங்கர் மட்டுமின்றி அவரது மனைவி பிரியங்கா டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்திலும் இந்திரஜா சங்கர் நடித்துள்ளார்.

திருமண நாள்
மாரி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வேலைக்காரன், மாரி 2, மிஸ்டர் லோக்கல், இரவின் நிழல், கோப்ரா, தி லெஜண்ட் உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக கலக்கி வரும் நடிகர் ரோபோ சங்கர் தனது 22வது திருமண நாளை இன்று குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார்.

ரஜினிகாந்த் கொடுத்த சர்ப்ரைஸ்
இந்நிலையில், திருமண நாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ரோபோ சங்கர் முன்வைத்திருந்தார். அதுக்கென்னப்பா.. வாங்க மீட் பண்ணலாம் என உடனடியாக சூப்பர்ஸ்டார் ஓகே சொல்ல ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே தனது குடும்பத்துடன் சென்று ரஜினிகாந்தை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கி உள்ளார் ரோபோ சங்கர்.

படையப்பா படத்திலேயே
ரோபோ சங்கர் ரஜினிகாந்தின் படையப்பா படத்திலேயே அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக கூட்டத்தில் ஒருவராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரஜினிகாந்தை சந்தித்து திருமண நாள் அதுவுமாக ஆசி பெற்றதும், இது போதும் தலைவா என நன்றி கூறியுள்ளார்.

ஹல்க்காக
பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் சாமியாராக நடித்த யோகி பாபு அடுத்ததாக யோகி பாபு, ஓவியா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள பூமர் அங்கிள் படத்தில் ஹல்க் பேயாக நடித்துள்ள காட்சிகள் சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டிரைலரில் இடம்பெற்றிருந்தன.