Robo Shankar: ரஜினி, கமலை ஒரே நேரத்தில் சந்தித்த ரோபோ சங்கர்... இதுதான் விஷயமா..?

சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடியனாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் ரோபோ சங்கர்.

திரையுலகிலும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக பல படங்களில் நடித்திருந்தார்.

Robo Shankar met Rajini and Kamal for his 22nd wedding anniversary

ஆனாலும், விஜய் டிவி வழியாக இன்னும் பிரபலமான ரோபோ சங்கர், இப்போது காமெடி நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் என இருவரையும் ஒரே நாளில் ரோபோ சங்கர் சந்தித்தது கவனிக்க வைத்துள்ளது.

ரஜினி, கமலிடம் ரோபோ சங்கர் ஆசி
1997ம் ஆண்டு முதல் திரையுலகில் நடிகனாக வேண்டும் என வாய்ப்புத் தேடி வந்தவர் ரோபோ சங்கர். ஆரம்பத்தில் பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து கவனம் ஈர்த்து வந்தார். அதன்பின்னர் விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றதும் ரொம்பவே பிரபலமானார். அதனால் சினிமாவில் அதிகம் வாய்ப்புகள் கிடைத்தன.

அதன்படி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதி, பசுபதியுடன் நடித்து சிரிக்க வைத்தார். அங்கிருந்து தொடங்கிய ரோபோ சங்கரின் திரைப் பயணம் அடுத்தடுத்து உச்சம் தொட்டது. தனுஷுடன் மாரி, மாரி 2, விஜய்யுடன் புலி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், ஹீரோ, அஜித்துடன் விஸ்வாசம், விஷாலுடன் இரும்புத் திரை, விக்ரம் உடன் கோப்ரா என பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வந்தார் ரோபோ சங்கர். இதனால் சினிமா உட்பட எந்தவிதமான பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரோபோ சங்கரின் உடல்நலக்குறைவுக்கு காரணம் அதீத மது பழக்கம் தான் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதேபோல், அவரால் இனி எழுந்து நடக்கவே முடியாது எனவும் தகவல்கள் பரவின.

ஆனால், இதற்கெல்லாம் ரோபோ சங்கரும் அவரது மனைவியும் விளக்கம் கொடுத்திருந்தனர். அதேபோல் அவரது மகளும் நடிகையுமான இந்திரஜாவும் ரோபோ சங்கர் குறித்து பேசியிருந்தார். தற்போது இந்திரஜாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல்கள் வெளியான போது ரோபோ சங்கர் தனது குடும்பத்தினருடன் கமல்ஹாசனை சந்தித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் இருவரையும் ரோபோ சங்கர் தனது மனைவியுடன் சந்தித்துள்ளார். இன்று அவரது 22வது திருமண நாள் என்பதால், ரஜினி, கமலிடம் ஆசி வாங்கச் சென்றுள்ளார் ரோபோ சங்கர். அப்போது அவர் ரஜினி, கமலுடன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. இதில், ரஜினி தலைவர் 170 லுக்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X