தளபதி 63 படம் மூலம் நடிகையாகும் வாரிசு: யார்னு தெரியுமா?
சென்னை: தளபதி 63 படம் மூலம் ஒரு பிரபல நடிகரின் மகள் நடிகையாகுகிறார்.
சர்கார் படத்தை அடுத்து விஜய் அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு ஒரு வாரத்தில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு பேர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் ஒருவர் பிரபல நடிகரின் மகள் ஆவார்.

மகள்
தளபதி 63 படம் மூலம் ரோபோ ஷங்கரின் மகள் நடிகையாகிறார். படத்தில் அவருக்கு முக்கிய கதாபாத்திரமாம். படிப்பு முக்கியம் என்று கூறி மகளை தேடி வந்த பட வாய்ப்புகளை தவிர்த்து வந்தார் ரோபோ. இந்நிலையில் விஜய் படம் என்றதும் மகளை நடிக்க வைக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

பரியேறும் பெருமாள்
பரியேறும் பெருமாள் படம் புகழ் கதிரும் தளபதி 63 படத்தில் நடிக்கிறார். அவரின் கதாபாத்திரம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் அட்லி அவருக்கு வெயிட்டான கதாபாத்திரம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்
விஜய் அண்ணா படத்தில் நடிக்கப் போவதை நினைத்து கதிர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நயன்தாரா
பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நயன்தாராவுக்கு எப்படி வெயிட்டான கதாபாத்திரம் கிடைக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











