பரதம், வீணை முக்கியம் பிகிலு..ரோபோ சங்கர் மகளின் அசத்தல் சாதனை!
சென்னை : விஜய்யின் பிகில் படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை அசத்தியவர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர்.
இவர் சமீபத்தில் வெளியான விருமன் படத்திலும் அதீதி ஷங்கருக்கு தோழியாக நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் இந்திரஜா சங்கர். தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

நடிகர் ரோபோ சங்கர்
பிரபல நடிகராக பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார் ரோபோ சங்கர். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிக்களை கவர்ந்து வருகிறது. சின்னத்திரையிலும் விஜய் டிவியில் இவர் பல முன்னணி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மிகவும் பிசியான நடிகராக உள்ளார்.

விஜய்யுடன் நடித்த இந்திரஜா சங்கர்
இதனிடையே இவரது மகள் இந்திரஜா சங்கரும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். விஜய்யுடன் இவர் இணைந்து நடித்த பிகில் படம் இவருக்கு சிறப்பான என்ட்ரியாக அமைந்தது. இந்தப் படத்தில் கால்பந்து வீராங்கனையாக பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். விஜய்யுடன் இணைந்து இவர் பல காட்சிகளில் தோன்றினார்.

ரசிகர்களை கவர்ந்த இந்திரஜா
இந்தப் படத்தில் இவரது நடிப்பு அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் முக்கியமான காட்சிகளில் இவர் நடித்திருந்தார். விஜய் இவரை வெறுப்பேற்றும் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இந்திரஜா. படத்தில் தன்னுடைய பருமனுக்கு ஏற்றாற்போல தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பார் இந்திரஜா.

விருமன் படத்திலும் இந்திரஜா
இந்தப் படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான விருமன் படத்திலும் அதீதி ஷங்கரின் தோழியாக நடித்து கவனம் ஈர்த்தார். இதனிடையே சமூக வலைதளங்களிலும் தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை இந்திரஜா பகிர்ந்து வருகிறார். இதன்மூலம் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.

பரதநாட்டியம், வீணை புகைப்படங்கள்
இந்நிலையில் தற்போது இவர் பரதநாட்டியம் மற்றும் வீணை வாசிக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் 15 ஆண்டுகளாக பரதநாட்டியல் கற்று வருவதாகவும் தன்னுடைய குரு துளசி செல்வலட்சுமி மேடத்திற்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

குருக்களுக்கு நன்றி
இதேபோல வீணை வாசிக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதேபோல வீணை குரு மதுமதி கண்ணன் மேடத்திற்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். 15 ஆண்டுகளாக இசை மற்றும் நாட்டியத்தை கற்று வரும் இந்திரஜா, விருமன் படத்திலும் அதீதியுடன் இணைந்து டான்ஸ் ஆடியிருந்தார்.


Click it and Unblock the Notifications











